ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது.. தொடர்ந்து நடத்திய போராட்டங்களுக்கு, பலன் கிடைத்துள்ளது.. ஒரு நல்ல செய்தி வெளியாகி விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழக ரேஷன்தாரர்களுக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், தேங்காய் விவசாயிகள் கோரிக்கை வைத்தபடி உள்ளனர்.

Happy News for Farmers Tamil Nadu Ration Holders and Do you know When will provide Coconut Oil in the TN Ration Shops

விவசாயிகள்: கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என்பதுடன், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் உடனடியாக விற்பனை செய்ய என்றும், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

எனினும் இதுவரை, விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை.. இதனால், அதிருப்திக்கு ஆளான விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழலுக்கு ஆளானார்கள்.

ரேஷன் கடைகள்: அதுமட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என்று திமுக அறிவித்திருந்த நிலையில், அதனை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை? என்றும் கேள்விகளை கேட்க துவங்கிவிட்டனர். இப்படிப்பட்ட சூழலில், நல்ல தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கூட்டுறவு காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு தேங்காய் விற்பனை துவங்கியுள்ளது. அதைதொடர்ந்து விரைவில் ரேஷன் கடைகளிலும் விற்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன..

கூட்டுறவுத்துறை : தமிழகத்தில் தேங்காய் விளைச்சல் அதிகம் உள்ளதால், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளிலும், பண்ணை பசுமை காய்கறி கடைகளிலும் விற்க கூட்டுறவு துறை முடிவு செய்திருக்கிறதாம்.

முதல்கட்டமாக "டேன்பெட்" எனப்படும் தமிழக கூட்டுறவு விற்பனை இணையம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கூட்டுறவு விற்பனை சங்கம் வாயிலாக அதில் உறுப்பினராக உள்ள விவசாயிகளிடம் இருந்து 10000 தேங்காய்கள் கொள்முதல் செய்திருக்கிறது.. இவை சென்னையிலிருக்கும் 4 கூட்டுறவு பண்டக சாலைகளுக்கு தலா 2500 - 3000 என்ற எண்ணிக்கையில் அனுப்பப்பட்டிருக்கிறதாம்.. இந்த தேங்காய்கள், அந்த பண்டக சாலைகள் நடத்தும் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன..

தேங்காய் விலை: இதுகுறித்து கூட்டுறவு துறை தரப்பில் சொல்லும்போது, கிலோ தேங்காய் 30 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோவில் ஒன்று அல்லது 2 தேங்காய் நிற்கின்றன. போக்குவரத்து செலவு சேர்த்து ஒரு தேங்காய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படும்...

இந்த விலை வெளிச்சந்தையைவிட சற்று குறைவாகவே இருக்கும். தேவையை பொறுத்து அதிக தேங்காய் கொள்முதல் செய்யப்படும். விரைவில் ரேஷன் கடைகளிலும் விற்கப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+