சர்க்கரை அட்டைதாரர்களுக்கு குஷி.. இலவச ரேஷனை பெறுவதில் திடீர் அறிவிப்பு.. டைம் நீட்டித்த மத்திய அரசு
சென்னை: இலவச ரேஷன் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இந்த பணியை முடிக்காவிட்டால், உங்களால் ரேஷன் பெற முடியாது என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள, மக்களின் வாழ்வாதாரத்துக்காக, ரேஷன் கடைகள் மூலமாக, மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபேல, கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) என்ற திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ், இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
கோதுமை: குறிப்பாக, 5 கிலோ உணவு தானியம் இலவசமாக தரப்பட்டு வருகிறது. இதனால், கோடிக்கணக்கான குடும்பங்களும் பயன் பெற்று வருகிறார்கள்.. அந்தவகையில், ஒவ்வொரு மாதமும் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இலவச அரிசி மற்றும் கோதுமையைப் பெறுகிறார்கள்.
ஆனாலும், இந்த திட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் நிறைய ரேஷன்தாரர்கள் உள்ளார்களாம்.. ரேஷன் கார்டுகளை பெற்றிருந்தும்கூட, அதனை முழுமையாக பயன்படுத்துவதில்லை.. சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் வாங்க முடியாமல் இருந்தாலும், தொடர்ந்து ரேஷன் பொருட்களை வாங்காமல் விட்டுவிடுவதால், இதில் சிலர் தவறாகவும் பயன்படுத்தி கொண்டு வருவதாக புகார்கள் கிளம்பியிருக்கின்றன. இதனால், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு இத்திட்டத்தின் பலன் கிடைப்பதில்லை..
ஊழல் சம்பவங்கள்: அதுமட்டுமல்லாமல், ரேஷன் விநியோகம் தொடர்பான ஊழல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக மில்லியன் கணக்கான மதிப்புள்ள உணவு தானியங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்த ஊழலைத் தடுக்கவும், அரசின் சலுகைகள் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும்தான், ரேஷன் கார்டுதாரர்களுக்கு E-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ரேஷன் கார்டு தொடர்பான புதிய அறிவிப்புகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, செப்டம்பர் 30-க்குள் E-KYC முடிக்க வேண்டும் என்றும், தவறினால், அக்டோபர் முதல் இலவச ரேஷன் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய அறிவிப்பு இந்த காலக்கெடுவை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ரேஷன் அட்டைகள்: எனவே, அனைத்து ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் KYC செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் ரேஷன் கார்டில் அவர்களுக்கு கிடைத்து வரும் பலன்கள் நின்றுவிடும் என்றும் உணவு வழங்கல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
கால அவகாசம் முடிவதற்குள், KYC சரிபார்ப்பை அரிசி அட்டைதாரர்கள் முடிக்கவில்லையானால், ரேஷன் பொருட்களை அவர்களால் பெற முடியாது... ரேஷன் கார்டில் பலன் பெற தகுதியில்லாத ஏராளமானோர் உள்ளதால்தான், இந்த eKYC சரிபார்ப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வசதி:
E-KYC-ஐ நீங்கள் இன்னும் முடிக்கவில்லையானால், ஆன்லைனிலேயே எளிதாக செய்து கொள்ளலாம்..
- ரேஷன் கார்டின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் நுழைந்து, உங்கள் "ரேஷன் கார்டு நிலை" விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.. - உங்கள் ரேஷன் கார்டு வகையை தேர்ந்தெடுத்து, தேடுவதற்கு CAPTCHA குறியீட்டை உள்ளிட வேண்டும்.
- உங்கள் ரேஷன் கார்டு செயலில் இருந்தால், "இணைப்பு ஆதார் / செயலிழக்கப்பட்டது" என்பதைக் காட்டினால், அந்த இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்..
- புதிய பக்கத்தில், உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு தேடி, உங்கள் ஆதார் எண்ணையும் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு, உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- E-KYC செயல்முறையை முடிக்க இந்த OTPயை சமர்ப்பிக்க வேண்டும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications