பாமாயில் ரேஷனில் தர்றாங்களா.. மளிகை பொருள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு.. ரேஷன் கடைகளுக்கு உத்தரவு
சென்னை: ரேஷன் அட்டைதாரர்கள் நிம்மதி பெறும்வகையில், கூட்டுறவுத்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.. அதுவும், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த முக்கிய அறிவுறுத்தல் பறந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் ஊழியர்கள், சில நேரங்களில் அட்டைதாரர்களை அவர்களுக்கு விருப்பமில்லாத பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக சில மாதங்களுக்கு முன்பு, புகார்கள் எழுந்தன.
அதாவது, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தவிர, உப்பு, சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.. கட்டுப்பாடற்ற பிரிவில் மளிகை, பாமாயில் விற்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை யார் வேண்டுமானாலும், தேவைக்கு ஏற்ப வாங்கலாம்... இந்த பொருட்களை வாங்க சொல்லித்தான், கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துகிறார்களாம்..

கூட்டுறவுத்துறை அதிரடி: இந்த பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து என்ற செய்தியும் பகீரை கிளப்பியது.. இது ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் கலக்கத்தை தந்தது.. முக்கியமாக, கிராமப்புற மக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகி விட்டனர். இதனால், திட்டமிட்டதைவிட அதிக தொகையை செலவிட நேர்வதாக அட்டைதாரர்கள் குமுறினார்கள்.. இதையடுத்து, கூட்டுறவுத்துறை இந்த வதந்திகளுக்கெல்லாம் கூட்டுறவுத்துறை முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
ரேஷன் அட்டைகள்: கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இது சம்பந்தமாக ஒரு விளக்கமும் தந்திருந்தார்.. அதில், 'பரவிவரும் செய்தி உண்மையல்ல.. ரேஷன் அட்டை பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரத்து செய்யப்படாது. ரேஷன் கார்டில் குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட முகவரியில் இருந்தால் அந்த கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது. போலி ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும்..
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் மத்திய உணவு பாதுகாப்பு விதிகளின் படி குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம். ரேஷன் கடையின் பெயரே நியாய விலைக்கடை என்பதாகும்.. அதனால், அநியாயமாக அதில் எந்த பணியும் செய்யக்கூடாது.
ரேஷன் கடைகளில் சோப்பு, சீப்பு, கண்ணாடி என விரும்பும் பொருள் இருந்தால் வாங்கட்டும். ஆனால், டார்க்கெட் கொடுப்பதாக ஊழியர்கள் சொல்கிறார்கள்.. அதுபோன்று எந்த கட்டாயமும் இல்லை. மக்கள் விரும்பும் பொருட்களை மக்கள் வாங்கலாம். விருப்பமில்லை என்றால் வாங்கத்தேவையில்லை.. ரேஷன் அல்லாத பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்களை எந்த காரணத்தை கொண்டும் கட்டாயப்படுத்தக்கூடாது" என்று தெரிவித்திருந்தார்.
புகார்கள்: இதற்கு பிறகு இந்த வதந்திகள் முடிவுக்கு வந்த நிலையில், அவைகள் தற்போது அதுபோன்ற புகார்கள் மட்டுப்படுத்தப்பட்டும் உள்ளது.. எனினும், ஆங்காங்கே இது சம்பந்தமான புகார்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றனவாம்..
கடை ஊழியர்கள், "மளிகை பொருட்களை வாங்கினால் இலவச அரிசி வழங்கப்படும் வழங்கப்படும்" என்று கட்டாயப்படுத்தி விற்கிறார்களாம்.. இதனால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், கூட்டுறவு அதிகாரிகளுக்கு புகார்கள் தற்போது சென்றுள்ளன.
ரேஷன் கடைகள்: ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களின் செலவினங்களை சமாளிக்கவே மளிகை பொருட்கள் விற்கப்படுகின்றன. அவற்றை யாரிடமும் கட்டாயப்படுத்தி விற்க கூடாது என்று அறிவுறுத்தல்கள் தரப்பட்டும், சில ஊழியர்கள் கடைபிடிக்காமல் உள்ளதால், நேரடியாகவே இந்த புகார் கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு சென்றுள்ளது.
இதையடுத்து, கட்டாய விற்பனை செய்வது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளாராம் அமைச்சர்.. அதுமட்டுமல்ல, ரேஷன்தாரர்கள் மீது எந்தவிதமான கட்டாயத்தையும் திணிக்க கூடாது என்று உத்தரவிடுமாறு, அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளாராம்..
மகிழ்ச்சி: இத்தனை நாட்களும், எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications