Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடையில் இனி இதுவும் ஈஸியா கிடைக்கும்.. சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. தமிழக அரசு மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகமெங்கும் பாமாயில், துவரம் பருப்புகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும், ரேஷனில் இந்த பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், தமிழக அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், 1 கிலோ கனடா மஞ்சள் பருப்பு, 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Happy News for Ration Card Holders easily get Pulses palm oil in Tamil Nadu Ration shops and 2000 tonnes of Pulses to ration

இவற்றை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.. ஆனால், ரேஷனில் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்தபடியே உள்ளன.-

இப்படிப்பட்ட சூழலில், 4 நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.. அதில், "அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

மளிகை பொருட்கள்: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எண்ணெய், பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பது விலை கண்காணிப்புக் குழுவுக்கு தெரியுமா? எண்ணெய், பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும்.

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு நியாயவிலைக்கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.

கோரிக்கை: ஏற்கனவே துவரம்பருப்பு, பாமாயிலுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியான நிலையில், டாக்டர் ராமதாஸின் இந்த கோரிக்கையானது மிகுந்த கவனத்தை ஈர்த்திருந்தது.

அதுமட்டுமல்ல, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என்று திமுக ஏற்கனவே, வாக்குறுதியில் அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டு, தென்னை விவசாயிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இப்போது பாமாயிலை உயர்த்தி தரும்படியான கோரிக்கையை டாக்டர் ராமதாஸ் வைத்துள்ளார். அப்படியானால் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுமா? பாமாயில் வழங்கப்படுமா? அல்லது இரண்டுமே வழங்கப்படுமா? என்று தெரியவில்லை.

பாமாயில்: ஆனால், பாமாயில், துவரம் பருப்புகளின் பற்றாக்குறையை தீர்க்க அரசு அடுத்த அதிரடியை மேற்கொண்டுள்ளது.. தற்போது, 20,000 டன் துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் பருப்பு, 2 கோடி எண்ணிக்கையில் ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட் வாங்கும் பணியில் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளதாம்.

இதையடுத்து, பாமாயில், துவரம் பருப்புகளுக்கான பற்றாக்குறை விரைவில் நீங்கும் என்றும், அனைவருக்குமே ரேஷனில் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+