Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிசி அட்டைதாரர்களே ஹேப்பி நியூஸ்.. அதைவிடுங்க, ரேஷன் மானியம் என்னாச்சு? தமிழக அரசுக்கு போன கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் மானியம் ரூ.750 கோடியை அரசு பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களும் முக்கிய கோரிக்கையை அரசுக்கு விடுத்து வருகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்களும் இதுகுறித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 2.25 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன... நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளிலிருந்துதான், மாவட்டங்களிலுள்ள ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.. அந்தவகையில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் 33,000 ரேஷன் கடைகளை நடத்துகின்றன..

ration shops tamil nadu government

ரேஷன் கடை: இந்த ரேஷன் கடைகளின் வாடகை, கரண்ட் பில், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு தமிழக அரசு வருடந்தோறும் மானியம் வழங்கி வருகிறது. அதாவது, ரேஷன் கடை செலவுகளுக்காக, கூட்டுறவு துறைக்கு வருடந்தோறும் 450 கோடி ரூபாயை மானியமாக வழங்கி வருகிறது. இந்த மானியமானது, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக ரேஷன் கடைகளை நடத்தும் ஒவ்வொரு சங்கங்களுக்கும் வழங்கப்படுகிறது.

ஆனால், இந்த மானியம் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை என்றும், அதனால் செலவுகளை சமாளிக்க முடியாமல் சங்கங்கள் நிதி நெருக்கடியில் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

மானியம்: இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் தரப்பில் சொல்லும்போது, "கடந்த 2021 - 22 மானியத்தில் 3 சதவீதம்; 2022 - 23ல் 51 சதவீதம்; 2023 - 24ல் 40 சதவீதம் நிலுவை என 750 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது... இந்த நிதியை அரசு விடுவிக்காமல் தாமதம் செய்வதால் ரேஷன் கடை வாடகை, ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற செலவுகளை செய்ய முடியாமல் சங்கங்கள் திணறிவருகின்றன. எனவே, நிலுவையிலுள்ள மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, சென்னை பட்டினம்பாக்கம், அபிராமபுரம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட 7 மகளிர் பண்டக சாலைகளின் கீழ் இயங்கி வரும் 59 நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று மற்றொரு தகவல் பரபரத்தது.

டிடிவி தினகரன்: இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், கார் பந்தயத்திற்கும், விளம்பரத்திற்கும் நிதி ஒதுக்கிவிட்டு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பது தான் திராவிட மாடலா?

ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 2 மாத ஊதியத்தை உடனடியாக வழங்குவதுடன், இனி வரும் காலங்களில் மாதந்தோறும் தடையின்றி ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் தினகரன் வலியுறுத்தியிருந்தார்.

என்ன காரணம்: அரசியல் தலைவர்கள் இவ்வாறு வலியுறுத்தி வருவது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு பிறகுதான், ரேஷன் கடைகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் மானியத்தொகை வராததால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகின..

சென்னை மண்டல கூட்டுறவு துணை பதிவாளர் இதுகுறித்து சொல்லும்போது, "அடையாறு, பட்டினப்பாக்கம், அபிராமபுரம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான சம்பளம் எதுவும் நிலுவையில் இல்லை.

விற்பனை: ரேஷன் கடைகளுக்கான மானியம் கிடைப்பதில்தான் தாமதம் ஏற்பட்டது. அப்படியிருந்தும், பொதுவினியோக திட்டத்தின் கீழ் வராத ஊட்டி டீ, மளிகை பொருட்கள், அரசு உப்பு போன்ற பொருட்களை விற்பனை செய்து அவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குமாறு தெரிவித்துள்ளோம் என்று உறுதி தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது. அந்தவகையில், சுமார் 80ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. அதேபோல, 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இதில், சுமார் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு: மீதமுள்ளவர்களுக்கு விரைவில் சரிபார்க்கும் பணி முடிந்து அட்டைகள் வழங்கப்படும் என்றும், தவறான தகவல்களை வழங்கிய காரணத்தால் ஆயிரக்கணக்கானோரின் விண்ணப்ங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி நிராகரிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதியிலுள்ள உணவு பொருட்கள் வழங்கல் துறையிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும், இதன் மூலம் மீண்டும் பரிசீலனை செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+