அரிசி அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. தீபாவளி நெருங்குது! கார்டுதாரர்களுக்கு 10ம் தேதிக்குள் ரேஷன்! செம
சென்னை: தீபாவளியை முன்னிட்டு, வரும் அக்டோபரில், முதியோரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை, வரும் 5, 6ம் தேதிகளில் மேற்கொள்ளுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.. அத்துடன், தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால், தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை கூட்டுறவு, உணவுத்துறைக்கு பிறப்பித்திருக்கிறது. இது ரேஷன்தாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அரிசி அட்டைதாரர்களுக்கு ஹேப்பி
சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைகளின் அறிவிப்பு பலகையிலிருந்து விநியோகத் தேதியினை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தினை மேற்குறிப்பிட்ட பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ளவும் அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது..
இத்திட்டத்தின் கீழ், 21.70 லட்சம் பயனாளிகளின் வீடுகளுக்கு, மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாகனங்களில் பொருட்களை எடுத்து சென்று, ரேஷன் ஊழியர்கள் வினியோகம் செய்து வருகிறார்கள். வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் என்ற அறிவிப்பானது, பயனாளிகளுக்கு பெத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
தீபாவளி பண்டிகைக்கு ஹேப்பி
இந்நிலையில், 20ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, வரும் அக்டோபரில், முதியோரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை வரும், 5, 6ம் தேதிகளில் மேற்கொள்ளுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படியே அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இதில் விருதுநகர் மாவட்டத்திலும், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் 5 மற்றும் 6ம் தேதி வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பும் தற்போது வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்.5 மற்றும் 6ம் தேதி 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறானளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
கார்டுதாரர்களுக்கு ரேஷன்
மேலும் இனிவரும் மாதங்களிலும் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேற்படி திட்டப் பயனாளிகளுக்கு அவரவர் இல்லங்களுக்கே நேரில் வந்து குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயனடைய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, தீபாவளியை முன்னிட்டு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.. அதன்படி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான உணவு பொருட்களை, வருகிற 10ம் தேதிக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை என்பதால் வீடுகளில் பலகாரங்கள் செய்வதற்கு பச்சரிசி, பாமாயிலின் தேவை அதிகமாக இருக்கும்.. எனவே இல்லத்தரசிகளின் தேவையை கருத்தில் கொண்டு,, இந்த மாதத்துக்கான ரேஷன் பொருட்களை கார்டுதாரர்களுக்கு, வரும் 10ம் தேதிக்குள் ஒரே தவணையில் வினியோகம் செய்ய வேண்டும் என்று , கூட்டுறவு மற்றும் உணவு துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
100% பொருட்கள் இருப்பு
அதுமட்டுமல்ல, பண்டிகைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்பதால், முன்கூட்டியே ரேஷன் பொருட்களை பெற்று கொண்டால் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
10ம் தேதிக்குள் ரேஷன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்பதால், ரேஷன் கடைகளுக்கு 100 சதவீத பொருட்களை கிடங்குகளில் இருந்து அனுப்பும் பணியில், நுகர்பொருள் வாணிப கழகம் துரிதமாக ஈடுபட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications