அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி.. ரூ.5 லட்சத்துக்கு இலவச சிகிச்சை.. மருத்துவ காப்பீடு திட்டம்: தமிழக அரசு
சென்னை: அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.. புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்பான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மருத்துவக் காப்பீடு மூலம் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடியும் என்றும் ரூ.5 லட்சம் முதல் சில நோய்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள்: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டிருக்கும் அரசாணையில் உள்ளதாவது:
"அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில், தமிழக அரசுபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டது.
காப்பீடு திட்டம்: அதில், அதில் அரசு ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் 30.06.2025 வரையிலும், ஓய்வூதியர்களுக்கு 1.7.2022 முதல் 30.06.2026 வரையிலும் தொடர்ந்து 4 ஆண்டுகள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெறவும் வகைசெய்கிறது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறும்வகையில், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான பொது மற்றும் நிதி வழிகாட்டு முறைகளைச் சமர்ப்பித்து, அவற்றுக்கு ஒப்புதல் வழங்குமாறு தமிழ்நாடு சுகாதாரத் திட்ட மாநில இயக்குநர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வழிகாட்டு முறைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள்: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறமுடியும். சிகிச்சை பெற விரும்புவோர், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையுடன், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் இதற்கென பணியில் இருக்கும் ஒருங்கிணைப்பு அலுவலரை அணுக வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான முன் அனுமதி பெற்ற பின்னர், சிகிச்சையை தொடங்க வேண்டும். எனினும், எதிர்பாராத சூழல் ஏற்பட்டால், மருத்துவசிகிச்சையை உடனடியாக தொடங்கி,பின்னர் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முன் அனுமதி மற்றும் தேவையான இதர ஆவணங்களைப் பெற வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண படுக்கை: அதாவது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம், கட்டண படுக்கை வார்டுகளிலும் சிகிச்சை பெற முடியும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களாக கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைக்கான செலவு, சில குறிப்பிட்ட வகையான நோய், சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெறலாம் என்பதுடன், 203 நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.. அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கட்டண படுக்கை பிரிவுகளில், இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு 2026! விடுபட்ட அனைத்து நில அளவை எண்களுக்கும் மாற போகும் புதிய ரூல்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications