சூப்பர்.. பள்ளி மாணவர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. இனி மாசா மாசம் வருது.. ரெடியா இருங்க.. தமிழக அரசு செம
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான நலன்குறித்து பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு செய்துவரும் நிலையில், இன்னொரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
நகர்ப்புற மாணவர்களை போன்று கிராமப்பற மாணவர்களும் பள்ளிக்கல்வி முதல் உயர் கல்வி வரை பெற வேண்டும் என்பதற்காக, பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு உபகரணங்கள், ஆய்வகம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன..
அதேபோல, வரும் 2023 - 2024ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு, மிதிவண்டிகள் வழங்கப்பட்டும் வழங்கப்பட்டு வருகின்றன.. வருங்காலத்தில் இனி அனைத்து பள்ளி மாணவர்களுக்குமே சைக்கிள் கிடைக்கும் என்று அமைச்சர் பொன்முடியும் 2 நாட்களுக்கு முன்பு சொல்லி அசரடித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, பொது தேர்வு நடத்தபட்டு வருகின்றன.. இந்த தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
தனியார் பள்ளிகள்: எனவே, தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு, ஸ்பெஷல் கோச்சிங்கும், டிரெயினுங்கும், தினமும் தேர்வுகளும் நடத்தி, மாணவர்களை பொதுதேர்வுகளுக்கு தயார்படுத்துகின்றன... அதனால்தான், தனியார் பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகின்றனர். அதன்படி, இதே ரூட்டை அரசு பள்ளிகளிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாம்..
பள்ளி மாணவர்களையும் அதிக மதிப்பெண் பெற வைக்கும் வகையில், மாதந்தோறும் தேர்வு நடத்தி, அவர்களை தயார்படுத்துமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்..
மதிப்பெண்: அதாவது, ஒவ்வொரு மாதமும் நடத்த வேண்டிய தேர்வு குறித்தும், அந்தந்த பாடத்திட்ட விபரங்கள் குறித்தும், பள்ளிகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்திருக்கிறார்களாம்.. இதன் மூலம், வரும் வருடம் பொதுத்தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு ஏற்படும் என்று ஆசிரியர்கள் பெருத்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அப்ப இனி மாணவர்களுக்கு தினமும் தேர்வுதான்..!!












Click it and Unblock the Notifications