குடும்ப அட்டைதாரர்களே.. இந்த நாளை மறக்காதீங்க! ரேஷன் கடைக்கு ரூ.300 கோடி மானியம்.. 2 சூப்பர் நியூஸ்
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில், 2 விதமான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. ரேஷன்தாரர்களுக்கு.ம், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பானது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில், ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை 35,083 ரேஷன் கடைகள் செயல்பட்டு வரும்நிலையில், கிட்டத்தட்ட இரண்டரை கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. அரிசி இலவசமாகவும், பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 2 விதமான குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.. அதாவது, ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பல வித குறைபாடுகளை சரி செய்ய முடியாமல் அலைந்து வரும்நிலையில், இந்த திருத்தங்களை உடனடியாக செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முகாம்கள்: வழக்கமாக, பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 25.01.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.. அதேபோல, தமிக அரசுமற்றொரு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடைகள்: கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், 33,000 ரேசன் கடைகளை நடத்துகின்றன. ரேஷன் கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது. அரசு விடுவிக்கும் இந்த மானியமானது, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ரேஷன் கடைகளை நடத்தும் ஒவ்வொரு சங்கங்களுக்கும் வழங்கப்படுகிறது.
எனவே, 2024-25ம் ஆண்டுக்கான ரேஷன் கடை செலவினங்களுக்கான மானியமாக ரூ.300 கோடி வழங்குமாறு கூட்டுறவு துறை சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற அரசு, 2024-25-ம் ஆண்டுக்கான முன் பண மானியமாக ரூ.300 கோடியை விடுவித்து உத்தரவு தந்துள்ளது..
பட்டுவாடா: இந்த மானிய தொகை மாநில தலைமை கூட்டுறவு வங்கி வாயிலாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்டு, கூட்டுறவு சங்கங்களுக்கு பட்டுவாடா செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். மானியம் தொகையை அரசு விடுவித்துள்ளதால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications