சொன்னதை செய்த ஸ்டாலின்! மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி.. சட்ட மசோதாவை தாக்கல் செய்த முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதற்கும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வதற்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர

சமீபத்தில், கொளத்தூரில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் பேசியதாவது, "இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவும் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை 41 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அதில் 2.60 லட்சம் இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர்.

disabled councillors differently abled TN Assembly stalin

நியமன முறையில் பிரதிநிதித்துவம்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டம் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் திருத்தப்படும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள்..

மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள். அவர்களின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும். அதிலும் முக்கியமாக விளிம்பு நிலை மக்களான மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம் பெறுவார்கள்.

மாற்றுத் திறனாளிகள்

திராவிட மாடல் ஆட்சிதான். திருநர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் அப்படிப்பட்ட வாய்ப்புகளைத் திறந்து விடும் அரசாக இருக்கிறது என்பதன் அடையாளம்தான், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கும் பிரதிநிதித்துவம்.இதுதான் உண்மையான சமூகநீதி அரசு. பெரியார் அரசு" என்று தெரிவித்திருந்தார்.

அதன்படியே இன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்குவதற்கான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார்.. மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்துள்ளது, தமிழக மக்களின் கவனத்தை தற்போது பெற்று வருகிறது.

இன்று சமூகநலன் துறை

தமிழக சட்டசபையில் இன்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடந்து வருகிறது.. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்குவதற்கான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்ததுடன், மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள் என்றும் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

அந்தவகையில், நகர்ப்புற உள்ளாட்சிகளை பொருத்தவரை ஒரு மாநகராட்சி மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, நகர் மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, பேரூராட்சிக்கு ஒரு மாற்றுத்திறனாளி என ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஒரு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக வைத்து குழு அமைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்ட மசோதா தாக்கல்

இதேபோல், ஊரக உள்ளாட்சிகளை பொறுத்தவரை கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் ஒரு மாற்றுத்திறனாளியை நியமன உறுப்பினராக நியமிக்கும் வகையில் ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுள்ளது.

நகர்புற உள்ளாட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்காலம் முடியும் வகையில் இவர்கள் பதவியில் இருப்பார்கள். இந்த சட்டமசோதா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+