ரயிலில் போறீங்களா? கூடுதல் லக்கேஜ்க்கு கட்டணம் வசூல்.. அது இருக்கட்டும், திருச்சி தந்த ஹேப்பி நியூஸ்
சென்னை: ரயில்வே விடுமுறையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமான பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கும் செல்கிறார்கள். ஏற்கனவே ரெயில் பயணிகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே சுமைகளை (லக்கேஜ்) கொண்டு செல்ல வேண்டும் என்ற நடைமுறை உள்ள நிலையில், புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2 அறிவிப்புகளை தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கிறது.
நம்முடைய நாட்டிலேயே மிகப்பெரிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து உள்ளது. இதன்மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களில் பல கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள்.

தெற்கு ரயில்வே அதிரடி
இதற்கு காரணம், பஸ் கட்டணத்தை விட மிகவும் குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளோடு ரயில்கள் இயக்கப்படுகின்றன. படுக்கை வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன. மேலும் நீண்ட தூர ரயில்களில் உணவகமும் செயல்படுவதால், பயணிகள ரயில்வேயை நாடி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ரயில்களில் லக்கேஜ்களை கொண்டு செல்ல தெற்கு ரயில்வே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் ரயில் பயணிகளின் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடை கொண்ட லக்கேஜ்களை எடுத்து செல்பவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் தொடர்பான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
லக்கேஜ்களுக்கு கட்டணம்
அதன்படி, AC முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையிலும், AC 2ம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையிலும், AC 3ம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையிலும், முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும், 2ம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான லக்கேஜ் எடுத்து வரும் பயணிகளுக்கு ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டம்
அதேபோல, திருச்சி ரயில்வே கோட்டம் கடந்த நிதியாண்டில் ரூ.1,416 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட திருச்சி ரயில்வே கோட்டம் கடந்த ஆண்டு ஏப்.1ம் தேதி முதல் நிகழாண்டு மார்ச் 31ம் தேதி வரையுள்ள நிதியாண்டில் 14.151 மில்லியன் டன் என்ற இலக்கை தாண்டி 14.766 மில்லியன் டன் அளவுக்கு சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
இதில் கையாளப்பட்ட சரக்குகளின் அடிப்படையில் 11.026 மில்லியன் டன் நிலக்கரி- ரூ.596.15 கோடி, 0.736 மில்லியன் டன் இரும்பு தாதுக்கள்- ரூ.56.15 கோடி, 0.042 மில்லியன் டன் உரம்- ரூ.5.90 கோடி, 0.957 மில்லியன் டன் சிமென்ட்- ரூ.59.61 கோடி, 1.558 மில்லியன் டன் உணவு தானியங்கள்- ரூ.82.26 கோடி, 0.012 மில்லியன் டன் இரும்பு மற்றும் ஸ்டீல்- ரூ.58 லட்சம், 0.050 மில்லியன் டன் கன்டெய்னர்கள்- ரூ.7 கோடி என வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
நில குத்தகை
அதேபோல, 38.614 மில்லியன் பயணிகளை கையாண்டதில் ரூ.520.13 கோடி, பார்சல், பயணிகள் லக்கேஜ், சிறப்பு ரயில் போக்குவரத்து, பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ரூ.42.25 கோடி, வணிக விளம்பரங்கள், கட்டணமில்லா வருவாயின செயல்பாடுகள், நில குத்தகை கட்டணங்கள் மூலம் ரூ.71.85 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி, திருச்சி ரயில்வே கோட்டம் கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.1,461.26 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என கோட்ட ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications