முதன்முறையாக.. தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த "திண்டுக்கல் சிந்து".. சபாஷ் நிமிர்கிறது வரலாறு
சென்னை: திண்டுக்கல் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் சிந்து.. யார் இவர்?
மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள், திருநம்பிகள் மீது சமூகத்தின் பார்வை வித்தியாசமானதாகவே இருந்து வருகிறது.. அவர்களையும் சக மனிதர்களாக கருதும் மனப்பக்குவம் ஏற்பட வேண்டும் என்று கருதிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருநங்கைகள், திருநம்பிகள் என்று அழைக்கும் சொல்லை தமிழ்ச்சமூகத்துக்கு அளித்தார்..

கருணாநிதி: அத்துடன், அவர்களுக்கெனவே பல திட்டங்களையும் உருவாக்கினார்.. தமிழக அரசும் 3ம் பாலினத்தவருக்கு பல திட்டங்களை திறன்பட செயல்படுத்தி வருகிறது.
அதற்கேற்றவாறு, வாய்ப்பு கிடைத்தால் எதையும் சாதித்து காட்டுவோம் என்று களமிறங்கிவிட்டார்கள் 3ம்பாலித்தனர்கள்.. போலீசாக, வக்கீலாக, டாக்டராக, என்ஜினீயர்களாக உருவாகி கொண்டிருக்கிறார்கள்.. சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கான அத்தனை போராட்டங்களையும் முன்னெடுத்து சாதித்து கொண்டிருக்கிறார்கள். சுயதொழில் மட்டுமின்றி மத்திய, மாநில அரசு பணிகளிலும் திருநங்கைகள் அசத்தி கொண்டிருக்கிறார்கள்..
திருநங்கை: அந்த வகையில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஒரு திருநங்கை ரயில்வேயின் டிக்கெட் பரிசோதகர் ஆகியிருக்கிறார்.. திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து என்பவர் பதவியேற்றுள்ளார்.
இதன்மூலம் தெற்கு ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பையும் சிந்து பெற்றுள்ளார்.. அவருக்கு ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், முதன்மை வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி, எஸ்.ஆர்.எம். தொழிறசங்க கோட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் ரபீக் ஆகியோர் வாழ்த்துக்களை சொன்னார்கள்.
தமிழ் இலக்கியம்: இதுகுறித்து சிந்து சொல்லும்போது, "என் சொந்த ஊர் நாகர்கோவில்.. பி.லிட் தமிழ் இலக்கியம் படிச்சிருக்கேன்.. 19 வருஷத்துக்கு முன்பு, எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியில் சேர்ந்தேன். 14 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு டிரான்ஸ்பர் ஆகிவந்தேன்.. ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினேன்..
எனக்கு திடீர்னு விபத்து ஏற்பட்டு, கையில் காயம் ஏற்படவும், மின்சார பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டேன். டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்தேன்.. இப்போது பதவி ஏற்றுள்ளேன்.
திருநங்கையாக பிறந்து விட்டோமே? என்ன செய்வது என்றெல்லாம் நான் சோர்ந்து போய்விடவில்லை. மனம் தளராமல் நன்றாக படித்து, இப்படி ஒரு நிலைமைக்கு வந்திருக்கிறேன்.. எல்லாருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்யுது.. அப்படியிருக்கும்போது, திருநங்கைகள் தங்களுக்கு மட்டுமே பிரச்சனை என்று நினைத்து மனம் தளரகூடாது.. கல்வி, உழைப்பு இருந்தால், எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டுருநங்கைகள் முன்னேற வேண்டும்" என்று பூரித்து சொல்கிறார் சிந்து.
சபாஷ்: ஒருகாலத்தில் வீட்டை விட்டும், ஊரை விட்டும் துரத்தப்பட்டு வந்த இந்த சமூகம், இன்று அனைத்து துறைகளிலும் சாதித்து வருவதுடன், இந்த சமூகத்தை தவறான பார்வையில் இருந்தும் நீக்கி வரலாறு படைத்து கொண்டிருப்பது, வரவேற்கத்தக்கது.. போற்றத்தக்கது..!!
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications