அசரடிப்பாரா அனிதா ராதாகிருஷ்ணன்.. இதெல்லாம் கிடைக்குமா இன்று.. எகிறும் எதிர்பார்ப்புகள்.. பரபர சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடந்து வருவதால் எதிர்பார்ப்புகள் கூடிவருகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் நடந்துவருகிறது.. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் சட்டசபை நிகழ்ந்து வருகிறது.. கடந்த 1ம் தேதி, அதாவது சனிக்கிழமையன்று தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை கட்டடங்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடந்து முடிந்தது.

மீண்டும் கூட்டம்
அன்றைய தினம் சட்டசபை கூட்டம் முடிந்ததுமே மறுநாள் ஞாயிறு விடுமுறை.. திங்கட்கிழமை 3ம் தேதி பேரவை கூட்டம் இல்லை. நேற்றைய தினம் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை... எனவே, இன்றைய தினம் 5ம் தேதி, உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் துறை மீதான விவாதம் துவங்கி உள்ளது.. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முக்கிய திட்டங்களை, அறிவிப்புகளை, இன்றைய தினம் வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முக்கிய திட்டங்களை கொண்டுவர போவதாக கூறியிருந்தார்.

வெளியாகும்
அதாவது, "வருடத்திற்கு ஒரு கன்று பெற அனைத்து நடவடிக்கைகளும் கால்நடை பராமரிப்புத்துறை மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டு கால்நடைகளை பராமரிப்பது குறித்து கருத்துரை வழங்கப்பட்டது. மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். தமிழ்நாடு முழுவதும் 245 நடமாடும் கால்நடை பராமரிப்பு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது...

செல்போன் நம்பர்
இதன் மூலம் கால்நடை மருத்துவமனைகள் இல்லாத குக்கிராமங்கள் போன்ற பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கென தனி செல்போன் நம்பர் அறிவித்து அதில் அழைத்தால் கால்சென்டர் மூலம் இந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட குக்கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது" என்று கூறியிருந்தார்.

எதிர்பார்ப்பு
அந்தவகையில், இன்றைய தினம் இதுசம்பந்தமான ஏதாவது அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. நாளைய தினம் 6ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மாலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிட உள்ளனர். தற்போது, சட்டசபையில், நிலக்கரி சுரங்கம்- சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன்மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications