தமிழ்நாடு அரசு அதிரடி.. இன்று சம்பளத்துடன் விடுமுறை.. யாருக்குன்னு பாருங்க.. வெளியானது அறிவிப்பு
அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது... இதற்கான உத்தரவும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணி
இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டம் - ஒழுங்கை பேணி காக்க 1.33 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

பொதுமக்கள்
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆனால், அதற்கு முன்பேயே மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளிக்கக வரிசையில் காத்து நின்றனர்.. 7 மணிக்கு பிறகு ஒவ்வொருவராக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தொடங்கினர்.. இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பொதுவிடுமுறை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது... அத்துடன் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனற் உத்தரவும் வெளிவந்துள்ளது.

அறிக்கை
இது தொடர்பாக சென்னை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் செந்தில்குமார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது: "தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி தேர்தல் நடைபெறும் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விடுமுறை
எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications