"ஜோர்".. ஒரே நாளில் ரூ.500 கோடியா.. ஹேப்பி நியூஸ் குடிமகன்களுக்கு.. நிரம்பி வழியும் டாஸ்மாக்குகள்..!
பொங்கல் கொண்டாட்டத்திற்கு மதுபானங்கள் டாஸ்மாக்குகளில் குவிக்கப்பட்டு வருகின்றன
சென்னை: பொங்கல் பண்டிகை களைகட்டிவிட்டதால், டாஸ்மாக் கடைகள் குறித்த அறிவிப்புகளும், அறிவுறுத்தல்களும் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் வழக்கமாக எல்லா ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவது வழக்கம்.
டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள்.. அதுபோலவே, டாஸ்மாக் கடையை ஜனவரி 12 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மூடுவதற்கு சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஹேப்பி பொங்கல்
இதேப் போன்று மற்ற மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவை வெளியிட்டு வருகின்றனர்... இந்த முறை பொங்கல் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை அதுவும் அரசு விடுமுறை நாளில் வருகிறது... முந்தைய நாள் சனிக்கிழமை போகிப்பண்டிகையும் விடுமுறையில் வருகிறது. எப்போதுமே, பண்டிகை நாட்கள் வார விடுமுறையில் வந்தால், டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பொங்கலுக்கு கூடுதலாக மது விற்பனை நடைபெறும்.. அதுபோலவே இந்த முறையும் அதிக விற்பனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாட்டுப்பொங்கல்
16-ந்தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் என்பதால் அன்றைய தினம் மதுக்கடைகள் மூடப்படுகின்றன... 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று வழக்கம்போல டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன... இந்த காணும் பொங்கல் தினத்தில்தான், டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அமோகமாக இருக்கும்.. எனவே, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 12 நாட்களுக்குரிய மதுபானங்கள் இருப்பு வைக்க வேண்டும் என்று முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்
குறிப்பாக, நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு போவதால், கிராமப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், அந்த பகுதிகளிலும் இருப்பு அதிகளவு வைக்க வேண்டும் என்று, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்... இன்றைய தினம் அதாவது வெள்ளிக்கிழமை முதல் பொங்கல் மது விற்பனை தொடங்குவதால், அநேகமாக இன்று இரவுக்குள், தமிழ்நாட்டில் 5,300 டாஸ்மாக் கடைகளிலும் தேவையான அளவு சரக்குகளும் இருப்பில் வைக்கப்பட்டு விடும் என்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை
இன்று மாலையில் இருந்து மது விற்பனை சூடு பிடிக்க துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதில், திங்கட்கிழமை, கடைகள் மூடப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை எப்படியும் ரூ.500 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகும் என்றும் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், மதுபானங்களை மொத்தமாக வாங்கி செல்லவும் குடிமகன்கள் ஆர்வம் காட்டுவார்கள் என தெரிகிறது. சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி ஆகிய 5 மண்டலங்களுக்கு உட்பட்ட கடைகளில் அனைத்து வகையான மதுபானங்களும் இல்லை என்று கூறாத அளவுக்கு இருப்பு வைக்கப்படுகிறது. மொத்தமாக பெட்டி பெட்டியாக வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று தொடங்கி 17-ந்தேதி வரை மதுவிற்பனை அமோகமாக இருக்கும் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications