4 மணி நேரம் சித்ராவுக்காக காரில் காத்திருந்தாரா ஹேமந்த்.. தீரா காதல்.. வெளிவரும் பரபர தகவல்கள்

சித்ரா தற்கொலை குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூமில் சித்ரா குளித்துவிட்டு, நைட்டியை மாற்றி உள்ளார் என்பதும், இறப்பதற்கு முன்பு, தன் அம்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.. இதனிடையே இந்த மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை இன்று ஆரம்பமாகி உள்ள நிலையில், சித்ரா குடும்பத்தினர் நேரில் ஆஜராகி உள்ளனர்.. இதையடுத்து சித்ரா தற்கொலையின் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ராவை பொறுத்தவரை, கடினமான உழைப்பாளி, தன்னம்பிக்கை மிகுந்தபெண், திறமைசாலி, அறிவாளி, என பல்வேறு நல்ல குணங்களை தாங்கி வலம் வந்தவர் என்பது தெரிந்த விஷயம்தான்.

ஆனால், இயல்பாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் திடீரென சில இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன.. அதில் சில நெருக்கடிகளும் அடக்கம்.. சில நெகிழ்ச்சிகளும் அடக்கம்!

பங்களா

பங்களா

சித்ராவுக்கு ஆரம்பத்தில் மிக மிக குறைவான ஊதியமே கிடைத்து வந்துள்ளது.. இப்போதுதான் ஒருநாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.. அப்பா, அம்மாவுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி தந்த நிலையில், இன்னொரு பங்களாவும் கட்டி உள்ளார்.. இந்த வீட்டு வேலைகள் இன்னமும் முடிவடையாமல், இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால், அதற்குள் கடந்த மார்ச் மாதம் ஒரு ஆடி காரை விலைக்கு வாங்கிவிட்டார். பிரச்சனையே இங்குதான் ஆரம்பித்துள்ளது.

கார்

கார்

நடிக்க வந்த ஒரே வருஷத்திற்குள் சித்ரா ஏற்கனவே ஒரு கார் வாங்கினாலும், இவ்வளவு பிரச்சனை வந்ததில்லை.. அந்த ஆடி கார் வாங்கவும்தான் நிறைய நெருக்கடி வந்துள்ளது.. ஏற்கனவே வீடு கட்டும் லோன் அப்படி, அப்படியே இருக்க, இந்த காருக்கான தவணையும் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால்தான் சீரியல் தவிர, மற்ற நேரங்களில் கடை திறப்பு நிகழ்ச்சிகள் உட்பட யார் எங்கே கூப்பிட்டாலும் அங்கே கலந்து கொண்டு சிறப்பித்து வந்துள்ளார்.

பெற்றோர்கள்

பெற்றோர்கள்

அதன்படியே ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கி உள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது. முதல் விசாரணையே சித்ராவின் பெற்றோர்தான்.. அந்த வகையில், சித்ராவின் குடும்பத்தினர் ஆஜராகியுள்ளார்... சித்ராவின் அப்பா காமராஜ், அம்மா விஜயா, சகோதரர் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.. விசாரணையின் இன்றைய முதல் நாளில் சித்ராவின் குடும்பத்தினரிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விஜயஸ்ரீ விசாரணை நடத்துகிறார்.. இதையடுத்து, நாளை ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை நடக்க உள்ளது. இந்த இரு தரப்பினருக்கும் தலா ஒரு மணி நேரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

 திருமண நாள்

திருமண நாள்

என்னதான், உள்ளூர், வெளியூர் என்று பறந்து கொண்டிருந்தாலும், தன் பெற்றோர் மீதான பாசத்தை ஒரு நொடியும் சித்ரா இழக்கவே இல்லை.. அவர்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்து தந்துள்ளார்.. சமீபத்தில்கூட அவர்களின் 60வது திருமண நாளை சிறப்பாக செய்துள்ளார். இதில் இன்னொரு விஷயத்தையும், சித்ராவின் நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள், தான் சம்பாதித்த பணத்தை பார்ட்டி, விருந்து என்று பெருமளவு செலவு செய்யவே மாட்டாராம்.. தன் குடும்பத்துக்காகவே சம்பாதித்த பணத்தை குருவி சேர்ப்பதுபோல சேர்த்து வந்தாராம்.

பொறுமை

பொறுமை

இப்படிப்பட்ட சூழலில்தான் கொரோனா வந்து முடங்கிவிட்டது.. அந்த நேரத்தில்தான் ஹேமந்த் வந்து சிக்கினார்.. சித்ரா என்றால் அவ்வளவு பிரியமாம் ஹேமந்துக்கு.. சித்ரா ஷூட்டிங்கில் இருந்தால், 4 மணி நேரம் காருக்குள்ளேயே பொறுமையாக காத்திருப்பாராம்.. பிறகு சித்ரா கிடைக்க வேண்டும் என்று கையை வெட்டிக் கொண்டுள்ளார்.. இதெல்லாம்தான் ஹேமந்த் மீது சித்ராவுக்கு காதல் அதிகரிக்க காரணம் என்கிறார்கள். இதற்கு பிறகு, பிசினஸில் லாஸ் என்று ஹேமந்த் சொல்லவும், அவருக்கும் பண உதவியும் செய்து வந்தாராம் சித்ரா.

நைட்டி

நைட்டி

ஏனென்றால் சித்ரா ஷூட்டிங்கில் இருந்து வந்தபோது, வேற டிரஸ்ஸில் இருந்தாராம்.. ஆனால், தற்கொலை செய்து கொள்ளும்போது நைட்டியில்தான் இருந்தார்.. அம்மாவுடன் போனில் பேசும்போது ஏற்பட்ட மன உளைச்சல் ஒரு பக்கமும், கணவரை விட்டுப்பிரிய முடியாமல் மற்றொரு பக்கமும் என மாறி மாறி மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததாக விசாரணையில் தெரியவருகிறது. எனினும், ஆர்டிஓ விசாரணை இன்று தொடங்கி உள்ளதால், சித்ரா மரணத்தில் உள்ள அனைத்து மர்ம முடிச்சுகளும் விரைவில் அவிழும் என்று நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+