Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் டூ நெல்லை கோர்ட்.. ஹரிநாடாருக்கு ஹைஃபை கொடுத்த மனைவி.. கைகோர்த்தபடியே கலங்கிய அண்ணாச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஸ் எரிப்பு வழக்கிற்காக திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரான ஹரிநாடார் மீண்டும் பெங்களூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவரது இரண்டாவது மனைவி ஹைபை கொடுத்தும் கைகளை இறுக்க கோர்த்தும் வழி அனுப்பி வைத்தார்.

நெல்லை மாவட்டம் ஆலங்குலம் அருகே உள்ள மேல இலந்தைக் குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரி நாடார். நீண்ட தலைமுடியுடன் வலம் வரும் ஹரி நாடார் நடமாடும் நகைக்கடை போலவே இருப்பார். கழுத்தில் விதவிதமான நகைகளை அணிந்தபடி வலம் வந்த ஹரி நாடார் பனங்காட்டுப்படை என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

Hari Nadar emotionally feels when he was taken to Bangalore Prison

கடந்த 2019 ஆம் ஆண்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற போது ஹரி நாடார் அங்கு பனங்காட்டுப் படை கட்சி சார்பாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஹரி நாடார் 3ஆம் இடம் பிடித்தார். அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தபோதிலும் 37 ஆயிரம் வாக்குகள் பெற்று கவனம் பெற்றார்.

ஹரி நாடார் மீது பல்வேறு மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது. தமிழகம் மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கட்ராமன் என்பவருக்கு கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ. 7 கோடி கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில் கர்நாடக போலீஸாரால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹரி நாடார் கைது செய்யப்பட்டார்.

அவர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பஷீர் மற்றும் குஜராத்தை சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் ஹரி நாடாரை கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி கைது செய்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ. 1.5 கோடி மோசடி செய்ததாகவும் அந்த பணத்தை மீட்டுத்தருமாறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் பழைய வழக்கு ஒன்றிற்காக ஹரிநாடார் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து நெல்லை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அப்போது நடந்த சம்பவம் வைரலாகி வருகிறது. அந்த வழக்கின் பின்னணி குறித்தும் பார்ப்போம். தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தை சேர்ந்த குமார் என்பவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மாமனார் குமார் என நினைத்து அவருடைய மருமகன் செந்தில் குமாரை மர்ம கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசியும் கத்தியால் குத்தியும் கொலை செய்தது. இந்த வழக்கில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு ரவுடியான ஹரி நாடார் தலைமையிலான கும்பல் தாழையூத்திலிருந்து தென்கலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை சேதப்படுத்தினர்.

இந்த வழக்கு விசாரணைக்காக பெங்களூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்த போலீஸார் அவரை நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் நீதிபதி விஜயகுமார் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது வரும் 17ஆம் தேதி ஹரி நாடாரை மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் ஹரிநாடாரை பெங்களூர் அழைத்து செல்ல போலீஸார் ஆயத்தமாகினர். அவர் ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அப்போது ஹரி நாடாரின் இரண்டாவது மனைவி மஞ்சு அவருக்கு ஹைஃபை கொடுத்தார். பின்னர் அவரது கையை இறுக்க கோர்த்தபடியே சில வினாடிகள் பிடித்திருந்தார். அப்போது யாரோ ஒரு பெண் அண்ணாச்சி கவலைப்படாதீங்க, நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்றார், உடனே ஹரி நாடார் கண்கலங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+