தூண்டுதலின் பேரில் போராட்டம்! என் கணவர் நிரபராதி! முன்னாள் மாணவி மீது குற்றம்சாட்டிய ஹரிபத்மன் மனைவி
சென்னை: எனது கணவரை பழி வாங்குவதற்காகவே பொய்யான புகார்களை கொடுத்துள்ளதாக ஹரி பத்மனின் மனைவி திவ்யா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ளது கலாஷேத்ரா கல்லூரி. இங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகிறார்கள். இங்கு நடனம், இசை, இசை வாத்தியங்கள் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. இந்த கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். இவர்கள் 4 பேரும் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரை கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் கலாஷேத்ரா மாணவிகள் கல்லூரிக்கு செல்வதை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் மாணவி புகார் கூறிய ஹரி பத்மனை சென்னை மாதவரத்தில் இருந்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு ஏப்ரல் 13 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் ஹரிபத்மனின் மனைவி திவ்யா காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கணவருடன் பணியாற்றிய 2 பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே முன்னாள் மாணவி குற்றச்சாட்டை அளித்துள்ளார்.
மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன், அனைவரது முன்னிலையிலும் எனது கணவரை பாராட்டியதாகவும், அதனால் 2 பெண் பேராசிரியர்களும் பொறாமையில், முன்னாள் மாணவியை தூண்டிவிட்டு பொய் புகாரை அளித்துள்ளாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மாணவி, கலாஷேத்ராவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரிடம் தனது கணவர் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் அவர், பொய்யான புகாரை அளித்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஹரி பத்மன் மனைவி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஹரி பத்மன் எந்த தவறையும் செய்யவில்லை. நாங்கள் இருவரும் இதே கல்லூரியில் படித்துவிட்டு இங்கு பணியாற்றி வருகிறோம். நாங்கள் கலாஷேத்ரா வளாகத்திலேயே குடியிருக்கிறோம். கலாஷேத்ரா பாலியல் விவகார போராட்டத்திற்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள்.போராட்டத்திற்கு பின்னால் உள்ளவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை.
காவல் துறை முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரணை நடத்த வேண்டும். உண்மை வெளிவந்தால் என் கணவர் நிரபராதி என தெரியும். என் கணவர் மீது முன்னாள் மாணவி கொடுத்த புகார் பொய் புகார். கலாஷேத்ராவில் நடனம் பயில்வதற்கு முன்னர் பிரார்த்தனை கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வார்கள். புகார் கொடுத்த மாணவி கலந்து கொள்ளாததால் என் கணவர் அந்த பெண்ணை கண்டித்தார்.

இதனால் என் கணவர் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். என் குழந்தைகளுக்கு என் கணவர்தான் ஹீரோ. எங்கள் குழந்தைகளிடம் பேசக் கூடாது என பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர் கூறியுள்ளதாக என் குழந்தைகள் தெரிவிக்கிறார்கள். தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததா சொல்லப்படும் தேதிக்கு பின்னர் கூட என் குழந்தையின் பிறந்தநாளுக்காக என் வீட்டுக்கு அந்த மாணவி வந்திருக்கிறார். பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் வந்த எங்களுக்கு இதெல்லாம் தேவையா. யுஜி படிக்கும் மாணவிகளுக்கு என் கணவர் வகுப்பெடுக்காத நிலையில் அவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக மற்ற மாணவிகள் எப்படி புகார் கூற முடியும் என திவ்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications