Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பொண்டாட்டியைகூட".. நான் சொல்லல.. அவர்தான் சொல்றாரு.. அண்ணாமலை சுளீர்..திமுகவுக்கு கடைசியா பஞ்ச் வேற

அண்ணாமலை, திமுக ஆ ராசாவுக்கு கோவை போராட்டத்தில் பதிலடி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசை கண்டித்து, கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கோவையில் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளின் இல்லம் மற்றும் பாஜக அலுவலுகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இது சம்மந்தமாக குற்றவாளிகள் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்..

 சுளீர் பதில்

சுளீர் பதில்

இந்நிலையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மற்றும் திமுக அரசை கண்டித்து கோவை சிவானந்த காலனி பகுதியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.. திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வீசிய நிலையி, திமுக எம்பி ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு குறித்தும் ஒரு பதிலடி தந்துள்ளார்.

 மரண சாசனம்

மரண சாசனம்

அண்ணாமலை பேசியபோது, "ஆ.ராசா அவர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.. தந்தை பெரியாரின் இறுதி பேருரை மரண சாசனத்தில் நீங்கள் பேசின விஷயம் இருப்பதாக காண்பித்தீர்கள். நீங்கள் காட்டிய அதே புத்தகத்தில் 21ம் பக்கத்தில், சில விஷயங்களை ஆ.ராசாவுக்கு படித்து காட்ட விரும்புகிறேன்.. அதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று எனக்கு சொல்ல வேண்டும்.

 கேடு வந்துச்சு

கேடு வந்துச்சு

பெரியார் அதில் சொல்கிறார், "நாதி இல்லையே.. சொல்கிறதற்கு நாதி இல்லையே... சிந்திக்க நாதி இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே - ஓட்டு வாங்குகிறதற்கு. இதற்கு கவலையே படமாட்டேன் என்கிறானே! யாரது? நம்ம முன்னேற்றக் கழகத்துக் காரன்தான்.. மற்றவனை எல்லாம் - என்னை எல்லாம் வைவான் 'இவனுக்கு ஏன் இதுவெல்லாம் கேடு வந்துச்சு இந்த முன்னேற்றக்காரனுக்கு?

 பொண்டாட்டி

பொண்டாட்டி

இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்?' என்று. அவனுக்கு ஓட்டுதான் பெரிது.. அவன் பெண்டாட்டி, பிள்ளையைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை. இன்னும் கொஞ்சநாள் போனால், இது வழக்கத்திலேயே வந்து விடும் என்று நம்புகிறான்.. - பெண்டாட்டியைக்கூடக் கொடுத்து, ஓட்டு வாங்குகிறார்போல, ஏனென் றால் அந்த உத்தியோகமும், அந்தப் பதவியும் அவ்வளவு உயர்வாய்ப் போய்விட்டன" என்று பெரியார் எழுதியிருக்கிறார்..

 ஆணி வேர் + நரம்பு நாடி

ஆணி வேர் + நரம்பு நாடி

பக்கம் 21-ல் நீங்கள் காட்டிய அதே புத்தகத்தில்தான் எழுதப்பட்டுள்ளது.. நீங்கள் சொன்ன அதே மாதிரி நானும் சொல்றேன், 'இதை நான் சொல்லல.. பெரியார்தான் சொன்னார்".. ஆ.ராசா இதற்கும் பேச வேண்டும்.. இதைவிட மோசமாக, உங்கள் இயக்கத்தின் ஆணி வேர், உங்கள் இயக்கத்தின் நரம்பு நாடி என்று மனிதர் சொல்லக்கூடிய எப்படி இந்த இயக்கம் இருக்கிறது என்று சொல்லி உள்ளார்.. அவரே சொல்கிறார் பொண்டாட்டி பற்றி அவனுக்கு கவலை இல்லை.. பொண்டாட்டியைக்கூடக் கொடுத்து, ஓட்டு வாங்குகிறார்போல என்று எழுதி வைத்திருக்கிறார் பெரியார்.

அட்வைஸ்

அட்வைஸ்

இதுக்கு முக ஸ்டாலின் ஒரு பெயரை வைத்திருக்கிறார். அதுதான் திராவிட மாடல்.. காலையில் தூங்கி எழுந்தது முதல் இரவு தூங்கும்வரை 20 முறை இந்த திராவிட மாடல் பெயரை சொல்லி கொண்டிருக்கிறார். இதற்கு அர்த்தத்தை யாரும் எங்கும் தேடி கொண்டு இருக்காதீர்கள்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தரும் அறிவுரை என்னவென்றால், தந்தை பெரியாரின் இறுதி பேரூரை மரண சாசனம் என்ற புத்தகத்தில் 21-ம் பக்கத்தில் உள்ள விளக்கத்தை படித்துவிட்டு, அதையும் உங்கள் அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும்" என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+