"விட்றாதீங்க.. இந்த மேட்டரில் கவனமா இருங்க".. திமுக பற்றி பாஜக சீனியர்களிடம் மோடி சொன்னது என்ன..பரபர
திமுக குறித்து பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர்களிடம் சொன்னது என்ன
சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்து சென்றதில் இருந்து, தமிழக பாஜக குஷியில் இருக்கிறதாம்.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்பட்டு வருகின்றன..!
சென்னை வந்ததுமே, எப்படியும் எடப்பாடி பழனிசாமி & ஓபிஎஸ் இரு தரப்பையும் நேரில் அழைத்து, பிளவுகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது..
ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. அதாவது,எடப்பாடியையும் ஓபிஎஸ்சையும் தனித்தனியாக சந்தித்து நேரில் அழைத்தும் பேசவே இல்லை என்பதுதான் ஹைலைட்டே.
ஆளுநர் மாளிகையில் நேற்று முன்தினம் இரவு எடப்பாடி, ஓபிஎஸ் இருவருமே பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டிருந்த நிலையில், கடைசி வரைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.. அதற்கு பதிலாக சென்னை வரும் போது பிரதமரின் வரவேற்பு நிகழ்வில் எடப்பாடி பழனிச்சாமியும், பிரதமர் சென்னையிலிருந்து புறப்படும் வழியனுப்பும் நிகழ்வில் ஓபிஎஸ்ஸும் பங்கேற்றனர்..
இவர்கள் பஞ்சாயத்தில் தலையிட்டு, ஒன்றிணைப்பால், பாஜகவுக்குதான் அது மைனஸ் என்று நினைத்து, சமாதான நடவடிக்கைகளை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், அன்றைய தினம் இரவே, கவர்னர் மாளிகையில் பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது..

சீனியர்கள்
தமிழகத்தின் பாஜக தலைவர்கள், கட்சி சீனியர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.. ஆனால், இவர்கள் எல்லாம் என்ன பேசினார்கள் என்பது இப்போது வரை உறுதியாக தெரியவில்லை.. எனினும், எடப்பாடி பழனிசாமி டீமில் நடப்பதை பிரதமர் கேட்டறிந்ததாக தெரிகிறது. அதேபோல, திமுக அரசு பற்றியும் புகார்களை பாஜக தலைவர்கள் அடுக்கினார்களாம்.. மத மாற்றங்கள் அதிகரிப்பு, பிரிவினைவாதம் பேசுவோரை திமுக கண்டுகொள்ளாதது, உட்பட பல்வேறு விஷயங்கள் எடுத்து சொல்லப்பட்டதாம்.. அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, தன்னுடைய கருத்தை பகிர்ந் கொண்டாராம்.

ஆதாரங்கள்
அதாவது, "இந்த பலமுறை தமிழகம் வந்திருக்கிறேன். ஆனால், சமீபகாலமாக தமிழக மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்கிறேன்... அவர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர்.. அதை உணர்ந்து கட்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். திமுக என்பது சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு எதிரான கட்சி... அதனால் திமுகவை நாம் எதிர்க்கும்போது, அது, தமிழ் மொழி, கலாசாரத்திற்கு எதிரான கட்சி என்பதுபோல மக்களிடம் சென்று சேர்ந்து விடக் கூடாது.. இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.. மாநில அரசு செய்யும் தவறுகளை, ஆதாரங்களுடன் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்" என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கெத்து இதுதான்
இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், பிரதமர் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்ட விஷயங்கள் குறித்த விவாதங்கள், சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளன.. "வெறும் மதத்தை மட்டுமே வைத்து, அல்லது மொழியை மட்டுமே வைத்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது... ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளே மக்களிடம் நெருங்க வைக்கும்... நீங்கள் வளர்ந்து விட்டீர்களா? இல்லையா என்பது இப்போது தெரியாது.. நேரடியாக ஏதாவது ஒரு தேர்தலில் தனித்து போட்டியிட்டால்தான், பாஜகவின் உண்மையான வளர்ச்சி தெரியவரும்.

ஒற்றை வார்டு
வேல் யாத்திரை, லாவண்யா மரணம், போன்றவை எல்லாம் அரசியலாக்கப்பட்டு விடுகிறது.. தனித்து போட்டியிட்டு வென்ற நாகர்கோவில் நகராட்சியை கோட்டைவிட்டுவிட்டு, மிக பெரிய பலத்துடன் இருப்பதாக சொல்லிவந்த கோவையிலும் ஒரே ஒரு வார்டை மட்டுமே வென்று, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்வது சரியல்ல.. அதனால், எம்பி தேர்தல் வரட்டும்.. பாஜகவின் வளர்ச்சியை பார்க்கலாம் என்கிறார்கள் ஒரு சாரார்..!

விசிறியடித்தனர்
இன்னொரு சாராரோ, பாஜகவை ஆதரித்து பேசி வருகிறார்கள்.. "உண்மையைதான் பிரதமர் சொல்லி உள்ளார்.. நிச்சயம் பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது.. பிரதமரின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.. இதற்கெல்லாம் காரணம் பாஜக தொண்டர்கள்தான்.. பட்டியலினத்தை வெறும் ஓட்டுக்காக பயன்படுத்திய கட்சிகளை தமிழக மக்கள் தூக்கியெறிந்துவிட்டனர்.. எல்லா மதங்களும் இருக்கும்போது வீரமணியோ, திருமாவோ கேள்வி கேட்கமுடியாது...

ஆஹா.. அமோகம்
பாஜக தமிழக தலைவர்கள், திமுகவுக்கு சரியான பதிலடியை முன்வைத்து வருகிறார்கள்.. அதிமுகவை விட பாஜக சீனியர்கள், கேள்விகளை கேட்டு விமர்சிடத்து வருகிறார்கள்.. போராடுகிறார்கள்.. மக்களிடமே நியாயத்தை கேட்கிறார்கள்.. இதெல்லாம் பார்த்தால் பாஜகவின் வளர்ச்சியாக தெரியவில்லையா? என்றும் கேட்கிறார்கள்.. ஆக மொத்தம், பிரதமர் மோடி வந்துபோனதன் தாக்கம், தமிழகத்தில் இன்னும் குறையவில்லை..!












Click it and Unblock the Notifications