SC-யோ, பள்ளரோ, பறையரோ.. ஆ. ராசா குலத்தொழிலையா பார்க்கிறார்.. பேசக்கூடாதுங்க.. சீறிய திருச்சி சூர்யா

ஆ ராசாவை சரமாரியாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார் திருச்சி சூரியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் ஆ.ராசா மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் நீதிமன்றத்துக்கு கண்டிப்பாக செல்வோம்.. 2ஜி வழக்கும், தற்போது நீதிமன்றத்துக்கு அப்பீலுக்கு போயுள்ளது.. இந்த ஊழல் நடந்தது உண்மை.. நான் திமுகவில் தான் இருந்தேன்.. எனக்கு எல்லாம் தெரியும்" என்று திருச்சி சூர்யா விமர்சித்துள்ளார்.

திருச்சி சூர்யா ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அப்போது, ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு, பாஜக ஏன் இவ்வளவு கொந்தளிக்கிறது? அவர் பேசியதில் என்ன தவறு? என்பது குறித்தெல்லாம் நாம் கேள்விகளை முன்வைத்தோம்.

அதற்கு திருச்சி சூர்யா நீண்ட விளக்கத்தை சற்று காட்டமாகவே தெரிவித்துள்ளார்.. மேலும், ஆ.ராசாவையும் அளவுக்கு அதிகமாகவே விமர்சித்து பேசியிருந்தார்.

 ஆ ராசா

ஆ ராசா

"நிபுர் ஷர்மா அன்று ஒரு கருத்தை சொன்னார்.. அது அவரது கருத்து கிடையாது.. முஸ்லிம் மதத்தை சார்ந்தவர் எழுதின நூலில் ஏற்கனவே இருந்ததை இவர் சொன்னார். இதற்கே நிறைய சர்ச்சைகள் வந்துவிட்டது.. அது ஏன் பேசுபொருளானது? இந்தியா மீது போர்த்தொடுக்கும் அளவுக்கு போய்விட்டதே.. அதேபோல அவர் பேசியதில் எங்களுக்கு விருப்பம் இல்லை, நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.. அந்தவகையில் ஆ. ராசாவின் கருத்து சர்ச்சையாகிவிட்ட நிலையிலும், அவருக்கு யாருமே எதிர்வினையாற்றவில்லையே ஏன்?

 பீப் + சவுண்டு

பீப் + சவுண்டு

அவர் ஒரு வார்த்தையை சொல்கிறார்.. அந்த வார்த்தையை நான் இங்கே சொன்னால் நீங்கள் பீப் சத்தம் வைப்பீர்கள்.. ஏன் வைக்கிறீர்கள்? அந்த வார்த்தை தப்பு என்பதால்தானே? சூத்திரர் என்பதற்கான அர்த்தத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், "தகப்பனின் பெயர் தெரியாத" என்று மேடை நாகரீகத்துக்காகவாவது சொல்லியிருக்கலாமே.. இவ்வளவு கீழ்த்தரமாக, கேவலமாகப்படுத்த வேண்டுமா? பெரும்பான்மையான மக்களை தேர்தல் சமயத்தில் மட்டும் ஓட்டுக்காக தேடறீங்களே.. சிவனே போற்றி, விநாயகனே போற்றி, முருகனே போற்றி இப்படியெல்லாம் ஸ்டாலின் பேசவில்லையா?

 பிராமணர்கள்

பிராமணர்கள்

புத்தகத்தில் இருப்பதை ஏன் பேசணும்? அதே மாதிரிதானே புத்தகத்தில் உள்ளதை, நுபுர் ஷர்மா பேசினாங்க? இந்துக்களுக்கு பாதுகாவலன் நாங்கள்தான் என்று சொல்லக்கூடிய ஸ்டாலின் கட்சியில் இருந்துகொண்டு, இப்படி பேசலாமா? தேர்தல் சமயத்தில் சபிக்கப்பட்ட இந்துக்கள் என்று பேச வேண்டியதுதானே? இப்படி பிரிவினையை தூண்டுவதே நீங்கள்தான்.. இடஒதுக்கீட்டுக்கு எதிராக அன்று ஹைகோர்ட்டுக்கு போனது பிராமணர்கள் 2 பேர் என்கிறார்.. அதற்காக ஒட்டுமொத்தமாக எல்லாரையும் குற்றஞ்சாட்டக்கூடாது..

கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்கள்

நீட் தேர்வு வழக்கு விஷயத்தில் நளினி சிதம்பரம் ஈடுபட்டுள்ளதால், அது காங்கிரஸின் கருத்து என்று சொல்லிவிட முடியுமா? அவரை காங்கிரஸ் பார்வையில் பார்க்க முடியுமா? ராகுல்காந்தியுடன் பாதிரியார் அன்னைக்கு அப்படி பேசினார்.. அதற்காக ஒட்டுமொத்த கிறிஸ்தவ மதத்தையும் குற்றம் சொல்லிவிட முடியுமா? அதனால் ஒட்டுமொத்த பிராமணர்களையும் குற்றம் சொல்லக்கூடாது. மேடைநாகரீகத்துடன் அவர் பேசவில்லை என்பதைதான் நாங்கள் சொல்கிறோம்.. தன்னை பற்றி 4 பேர் பேச வேண்டும் என்பதற்காக ராசா இப்படி பேசினாரா? ஸ்டாலினை வேண்டுமென்றே காலி செய்ய வேண்டும் என்பதற்காக பேசுகிறாரா? என்று தெரியவில்லை..

 கருணாநிதி

கருணாநிதி

இந்நேரம் கருணாநிதி உயிருடன் இருந்து, "இந்துக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் கிடையாது" என்று சொல்லிவிட்டு, கையில் வேல் பிடித்து, ஸ்டாலின் சென்றிருந்தால், நிச்சயம் ஸ்டாலினை கருணாநிதி கட்சியில் இருந்து தூக்கியிருப்பார்.. 80 சதவீத இந்துக்களுக்கு நாங்கள் ஆதரவு என்று ஸ்டாலின் அன்றும் சொன்னார்..ஆனால், அப்போது கருணாநிதியால் பேச முடியாமல் நிலைமை இருந்தது.. சூத்திரன் என்ற வார்த்தையை யார் இப்போ இவரிடம் கேட்டது? யார் இப்போது அந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்? பயன்பாட்டில் வார்த்தை உள்ளதா? இந்த என்சைக்ளோபீடியோகிட்ட யாராவது விளக்கம் கேட்டாங்களா?

இலாகா

இலாகா

சாதி வேண்டாம் என்று சொல்கிறவர், கேபினட்டில், எஸ்சி கோட்டாவில் அமைச்சராக இருந்தபோது மட்டும் சாதியை ஏன் வேண்டாம் என்று சொல்லவில்லை.. இலாகா அமைச்சராக இருந்தபோது மட்டும் சாதி தேவையா? அந்த இலாகாவில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பணம் அடிச்சாரே? இது குற்றம் இல்லை என்று சொல்லாதீங்க.. நீதிமன்றத்துக்கு அப்பீலுக்கு போயுள்ளது.. இந்த ஊழல் நடந்தது உண்மை.. நான் திமுகவில் தான் இருந்தேன்.. எனக்கு தெரியும்..

ரியாலிட்டி

ரியாலிட்டி

இன்றைய சர்ச்சை பேச்சுக்கு, ராசா மீது நடவடிக்கை கோரி, ஸ்டாலினுக்கு ஒருவாரம் டைம் தரப்பட்டுள்ளது.. நடவடிக்கை எடுப்பீர்களா? நீதிமன்றம் செல்லட்டுமா? என்று நாங்கள் கேட்டுள்ளோம்.. அந்த காலக்கெடு முடியட்டும்.. இல்லாவிட்டால், நீதிமன்றத்தை அணுகுவோம்.. ராசா மீது கேஸ் போடுவோம்.. ரியாலிட்டியை பேசுங்க.. எஸ்.ஸியோ, பள்ளரோ, பறையரோ என்று பேர் சொல்லி யாரையுமே பேசக்கூடாது.. சர்ட்டிபிகேட்டில் இருந்தாலும், அப்படி நாம பேசக்கூடாது.. இவர் என்ன குலத்தொழில் பார்க்க சொல்றாரா? அப்படின்னா இவர் என்ன வேலை செய்யணும் தெரியுமா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+