ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத தமிழக பாஜக.. அண்ணாமலைக்காக "பச்சைகொடி"யுடன் ஓடோடி வந்த தலைவர் பாருங்க
சென்னை:லோக்சபா தேர்தலில் பாஜக ஒரு இடத்தையும் எட்டிப்பிடிக்காத நிலையில், தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பது போன்ற விவாதங்கள் வெடித்து வருகின்றன.
தமிழகத்தில் பாஜக படுதோல்வியை அடைந்துள்ள நிலையில், இது பாஜகவினருக்கே கடுமையான அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஆனால், தமிழகத்தில் வாக்கு வங்கி உயர்ந்திருப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து சொல்லி வருகிறார்.

வாக்கு வங்கி: நேற்றுகூட செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. மக்கள் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதை படிப்பினையாக எடுத்துக் கொண்டு அடுத்து வரும் தேர்தலில், இங்கிருந்து பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால், அண்ணாமலையின் இந்த வாதத்தை பலரும் ஏற்கவில்லை.. பாஜகவின் தீவிர ஆதரவாளரான நடிகர் எஸ்வி சேகரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்வி சேகர், "தமிழக பாஜக தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம் என்பது 100 சதவீதம் உண்மையான விஷயம். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அவர் கட்சியையே போலீஸ் ஸ்டேஷன்போல நடத்துகிறார்.
வாஷ் அவுட்: தமிழ்நாட்டில் பாஜக தோற்றாலும் வாக்கு வங்கி சதவீதம் உயர்ந்ததாக சொல்கிறார்கள். இது முட்டாள் தனமானது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோற்றது தான். பாஜக தமிழ்நாட்டில் வாஷ் அவுட் ஆகி விட்டது என்பதே உண்மை" என்று திடமாக கூறுகிறார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்து மக்கள் கட்சி அண்ணாமலைக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழகத்தில் பாஜக நன்றாகவே வளர்ந்துள்ளதாகவும் கூறியிருக்கிறது.
நலத்திட்டங்கள்: இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இதுகுறித்து பேசும்போது, "பிரதமர் மோடி ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. வரும் ஐந்தாண்டு பொற்கால ஆட்சியாக இருக்கும். தமிழகத்தில் 40 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றும் எந்த பிரயோஜனம் இல்லை. மக்களின் நலனுக்காக அவர்கள் மத்திய அரசோடு இணைந்து போக வேண்டும்.
அரசியலில் மோடியை எதிர்த்தாலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் தமிழகத்தில் கிடைப்பதற்காக ஒத்துப்போக வேண்டும். பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றபோதிலும் மோடி தோற்று விட்டதுபோல சொல்கிறார்கள்.. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிரதமர் மோடி நல்ல அரசாக நடத்துவார். எதிர்க்கட்சிகளை மோடி அரவணைத்து செல்வார்.
அண்ணாமலை: தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில், 3 மடங்கு அதிக ஓட்டுகளை பாஜக பெற்றுள்ளது. 2026ல் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் காவல்துறையை திமுக தவறாக பயன்படுத்துகிறது. உத்தரபிரதேசம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஓட்டு ஜிகாத் நிகழ்த்தப்பட்டுள்ளது... உபியில் பாஜக மீண்டு வரும்" என்று கனத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார் அர்ஜுன் சம்பத்
பாஜக வளர்ச்சி குறித்து, சொந்த கட்சிக்குள்ளேயே, சொந்த ஆதரவாளர்களிடமே முரண்பட்டு கருத்து வெடித்து வருவது இணையத்திலும் எதிரொலித்து வருகிறது.. "குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறதா பாஜக?" என்று மாற்று கட்சிகள் சோஷியல் மீடியாவில் கிண்டலடித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்












Click it and Unblock the Notifications