"தொட்டுப்பார்".. துண்டு துண்டா சிதறும் கணக்கு.. "2 பேருடன்" பாஜக கூட்டணி.. சொல்றது யார்ன்னு பாருங்க
சிவி சண்முகம் ஏன் அப்படி பேசினார் என்று கேசி பழனிசாமி காரணம் சொல்லி உள்ளார்
சென்னை: சிவி சண்முகம் பேச்சு யாரும் சீரியஸாக எடுத்து கொள்ள தேவையில்லை.. திமுக - பாஜக கூட்டணி என்று அவர் பேசுவதற்கு வேறு காரணம் உள்ளது என்று அதிமுக மூத்த தலைவர் கேசி பழனிசாமி கருத்து கூறியுள்ளார்.
பாஜக - திமுக கூட்டணி ஏற்படும் என்ற சிவி சண்முகம் பேசியிருந்தது, பெரும் பரபரப்பை கிளப்பிபடியே இருக்கிறது.. இதற்கு பின்னணி என்ன? திடீரென சிவி சண்முகம் பேசுகிறார் என்றால், அதற்கு பலமாகவும் தூண்டுகோலாகவும் இருப்பது யார்? என்ற கேள்வியும் எழுந்தபடியே உள்ளது.

கணை 1
இது ஓபிஎஸ் தரப்புக்கு மட்டுமல்லாமல் மட்டுமல்லாமல், கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன், சிவி சண்முகம் பேச்சுக்கு அப்போதே அதிருப்தி கண்டனம் தெரிவித்திருந்தார்..

பழனி பழனிசாமி
யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சிவி சண்முகத்தின் அறிவுரை, ஆலோசனை பாஜகவுக்கு தேவையில்லை என்று நாராயணன் கூறியிருந்தார்.. காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என்று சி.வி.சண்முகம் பேசியது அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என்றும் விமர்சித்திருந்தார்... ஆனால், வெறும் கண்டனத்துடன் இவ்விவகாரம் முடியவில்லை என்கிறார்கள்.. டெல்லி வரை சிவி சண்முகம் பேசியதை தமிழக பாஜக கொண்டுபோய்விட்டதாக சொல்கிறார்கள்.. இந்நிலையில், ஒரு டிவி சேனலுக்கு மூத்த தலைவர் கேசி பழனிசாமி ஒரு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், சிவி சண்முகம் எதற்காக அப்படி பேசினார் என்பது குறித்தும் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

துண்டு துண்டாக
"பாஜகவை பொறுத்தவரை அவர்களின் தேர்தலின் வியூகமே வித்தியாசமானது.. பல்வேறு மாநிலங்களில் இப்படித்தான் செய்து வருகிறார்கள்.. எந்த கட்சியுடன் அவர்கள் கூட்டணி வைக்க முற்பட்டாலும், முதலில் அதை 4, 5 பகுதிகளாக, குழுக்களாக, துண்டுகாளக பிரிப்பார்கள்.. அந்த குழுக்களை பாஜகவின் தலைமையிலேயே இருக்கும்படி கூட்டணி வைத்து கொள்வார்கள்.. அப்படித்தான், ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என்று இரண்டாக பிரித்து, இரண்டிலும் கூட்டணி வைத்து கொள்வார்கள்.. அதையும் 2, 3 ஆக மறுபடியும் பிரித்து, மறுபடியும் கூட்டணி வைத்து கொள்வார்கள்.. அதாவது அந்த வாக்குகளை, பிளந்து, பிரித்து, தன்னை வலிமைப்படுத்தி கொள்கிற வழிவகையைதான் பாஜக கடைப்பிடித்து வருகிறது.

பயம் காட்டறாங்க
சிவி சண்முகம் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.. எங்களுடைய எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக ஏற்று கொள்ளுங்கள், அப்போதுதான் நாங்கள் உங்கள் கூட்டணிக்கு வருவோம் என்று இவர்கள் பாஜகவுக்கு பயம் காட்டுகிறார்களாம். அல்லது எச்சரிக்கை விடுக்கிறார்கள்.. அல்லது கோரிக்கை விடுக்கிறார்கள் என்று வேண்டுமானால் வைத்து கொள்ளலாம்.. மற்றபடி சிவி சண்முகம் பேசுவதை யாரும் சீரியஸாக எடுத்து கொள்ள தேவையில்லை. அவர் பாவம்.. சுகம் பிரஷர் இருக்கு.. சாதாரணமா சிவி சண்முகம் பேசினாலே டென்ஷனா பேசுவதுபோலத்தான் தெரியும். கோபமாக பேசுவது போலத்தான் தெரியும். 6 மணிக்கு மேல் பேசினாரா? என்றும் பார்க்க வேண்டும்.

தொட்டுப்பார்
இவ்வளவு பேசுகிறாரே சிவி சண்முகம், "முடிந்தால் எங்கள் எடப்பாடியை தொட்டுப்பார் பாஜகவே.. அமித்ஷாவே" என்று பேச சொல்லுங்களேன் பார்ப்போம்.. அதனால், எடப்பாடி தலைமையை ஏற்க வேண்டும் என்பதே சண்முகம் போன்றோரின் கோரிக்கையாக உள்ளது..நேற்று முன்தினம் ஓபிஎஸ் அவருடைய கூட்டத்தில் முன்வைத்துள்ள எடப்பாடி மீதான குற்றச்சாட்டுகள் எல்லாமே உண்மைதான். எடப்பாடி மீது சொன்ன புகார்களில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இல்லை.. ஆனால், அத்தனை குற்றச்சாட்டுகளும் ஓபிஎஸ்ஸூக்கும் பொருந்தும், ஓபிஎஸ்ஸூடன் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

டபுள் துரோகம்
அதாவது, கொள்கை, லட்சியம், அடுத்தவங்க நம்மை பற்றி தப்பாக பேசுவாங்களே, ஏளனமான பேசுவாங்களே, சொன்ன சொல் தவறாமல் நடக்க வேண்டும், இப்படியான விஷயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும்.. தனக்காக, தன் குடும்பத்துக்காக, தான் அடைய நினைக்கிற பதவிக்காக, தன் சம்பாதிக்கிற நினைக்கற அந்த பணத்துக்காக, எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நிலைமையில்தான் எடப்பாடி + ஓபிஎஸ் இருவருமே உள்ளனர். இரண்டு பேருமே துரோகிகள்தான்" என்றார் ஆவேசமாக பழனிசாமி.

கைம்மாறு
தொடர்ந்து அவர் பேசும்போது, "எடப்பாடி பழனிசாமி, அடாவடி பழனிசாமியாக இருக்கிறார்.. "பாஜக சொன்னது, அதனால்தான் அதிமுகவில் மறுபடியும் இணைந்தேன்" என்று சொன்னவரே ஓபிஎஸ்தானே.. இவர் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருக்கிறார்.. ஆனால் தன்னை வளர்த்த இயக்கத்திற்கு மாபெரும் துரோகியாக இருக்கிறார்.. ஓபிஎஸ்ஸூம் சரி, எடப்பாடியும் சரி, இவர்கள் 2 பேரும் சேர்ந்து செய்யும் நடவடிக்கைகள், அதிமுகவின் வாக்கு வங்கியை சிதறடிப்பதாகவே உள்ளது.. அதிமுக தொண்டர்களிடம் மனசோர்வை ஏற்படுத்துவதாக உள்ளது.. இதன் பலன் என்னவென்றால், தங்களுடைய வாக்கு வங்கியை பலப்படுத்தி கொள்ள பாஜகவும், அபாரமாக வெற்றி பெறுவதற்கு திமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன.. யாராவது அதிமுக முன்னாள்கள் இதுவரை கைதாகி இருக்கிறார்களா? யாரும் கைதாக மாட்டார்கள்.. இதற்கு கைமாறாக எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் திமுக + பாஜகவிடம் எதிர்பார்ப்பது எல்லாம் தங்கள் மீது எந்த நடவடிக்கைகளும் கூடாது என்பதுதான்..!!












Click it and Unblock the Notifications