"கேட்டுச்சா".. குருமூர்த்தியை விடுங்க.. அமித்ஷா டேபிளில் "ஃபைல்".. அதிர்ந்த கமலாலயம்.. அப்ப எடப்பாடி
குருமூர்த்தி, அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பற்றி பேசியதாக சொல்லப்படுகிறது
சென்னை: எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவில் மட்டுமல்லாமல், பாஜகவிலும் எகிறி வருகிறது.
மதுரைக்கு மோடி வரும்போது, தங்கள் பிரச்சனையை பேசி அதற்கு ஒரு முடிவுகட்ட எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸூம் திட்டமிட்டார்கள்.. ஆனால், இருவரையும் ஒன்றுசேரும்படி, அழுத்தமான "சிக்னல்" தந்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். சென்றுள்ள
அடுத்து அமித்ஷா வந்தார்.. எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா சந்திக்க வாய்ப்பில்லை என்று முன்னமேயே தகவல்கள் கசிந்தன.. இதற்கு பல்வேறு காரணங்களும் வட்டமடித்தன..

தர்மசங்கடம்
குறிப்பாக, நாமக்கல் கூட்டத்தில், மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தது, டெல்லி வரை தகவல் சென்றுவிட்டதாம்.. கூட்டணியை முடிவு செய்வதும், இறுதி செய்வதும், கூட்டணி தலைமைதான், என்றபோது, இப்படி திடுதிப்பென்று எடப்பாடி அறிவித்தது, மேலிடத்தை சங்கடப்படுத்தியதாக கூறப்பட்டது. அதுபோலவே இன்னொரு தகவலும் வெளியானது.. கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷாவை, ஆடிட்டர் குரு மூர்த்தி தனியாக சந்தித்து பேசியிருக்கிறார்..

குருமூர்த்தி
கிட்டத்தட்ட இருவரும் 10 நிமிடங்களுக்கும் மேல் பேசியதாக சொல்கிறார்கள்.. அமித்ஷாவிடம் குருமூர்த்தி பேசும்போது, "அதிமுக ஒன்றுபட வேண்டும், ஓபிஎஸ் அதிமுகவில் இருப்பது கட்சி ரீதியாக பலம் பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பாஜகவுக்கும் சாதகமாக இருப்பார், ஆனால், எடப்பாடியை எதுக்காக பிரதமர் மோடி ஏர்போர்ட்டில் சந்திக்க வேண்டும்? இது தேவையில்லாதது" என்று கூறினாராம்... மேலும், அமித்ஷா சென்னைக்கு வருவதற்கு முன்னமேயே, அவருக்கு ஒரு ஃபைல் இங்கிருந்து சென்றதாக தெரிகிறது..

சீக்ரெட் ஃபைல்
அந்த ரகசிய ஃபைலில், தொடர்ந்து ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு, பிடிவாதம் பிடித்து வரும் எடப்பாடியின் அறிவிப்புகள், செயல்பாடுகள் போன்றவைகள் குறித்த டேட்டாக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாம். குறிப்பாக, "மெகா கூட்டணி என்று எடப்பாடி பேசினாலும், அதனால் பாஜகவுக்கு பெருமை இல்லையே? அதிமுக கூட்டணிக்குள் பாஜகவும் இடம்பெறும், அவ்வளவுதான்.. மற்றபடி பாஜகவை வளர்ப்பதற்கான செயல்பாடுகள் எதுவும் எடப்பாடி தரப்பில் இல்லை.. அவரவர் கட்சியின் பெருமையை பேசிவருகிறார்களே தவிர, பாஜகவுக்கான முக்கியத்துவம் என்பதை யாரும் தரவில்லை" என்பது போன்ற சில விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

ஓஹோ வெற்றிடம்
அதை வைத்துதான், அமித்ஷா நிர்வாகிகளிடம் பேசும்போது, "கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிந்தைய அரசியலில், ஒரு பெரிய வெற்றிடம் தமிழகத்தில் உருவாகி உள்ளது.. பாஜகவினர் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம்" என்றாராம்.. அதாவது, அமித்ஷா வெற்றிடம் என்று சொன்னது, அதிமுகவில் நிலவிவரும் ஓட்டைகளைதான்.. உட்கட்சி பூசலால் அக்கட்சி நிலைகுலைந்து வரும் நிலையில், அதை பாஜக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே அமித்ஷா பேச்சின் சாராம்சமாக உள்ளதாம்..

டேட்டாக்கள்
அதேசமயம், குருமூர்த்தி தன்னை பற்றி பேசியது முதல், அமித்ஷாவுக்கு பறந்த டேட்டாக்கள்வரை எடப்பாடி தரப்புக்கும் தெரியாமல் இல்லை.. அந்தவகையில், பாஜகவின் பேச்சுக்கு எடப்பாடி கட்டுப்படலாம் அல்லது தன்னை கழட்டிவிட்டு, தனித்து போட்டி என்ற முடிவையும் பாஜக எடுக்கலாம் என்பதையும் எடப்பாடி உணர்ந்துள்ளாராம்.. இப்படியெல்லாம் தகவல்கள் வட்டமடித்து வந்தாலும், தொண்டர்களின் நலன் கருதி, முடிவு எடுக்க போவது என்னவோ எடப்பாடி பழனிசாமி என்பதால், சிலுவம்பாளையத்தை நோக்கியே ரத்தத்தின் ரத்தங்களின் பார்வை ஆதங்கத்துடன் வீசப்பட்டு வருகிறது.. பார்ப்போம்..!!
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications