Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணியில் கமல்ஹாசன்! - இயல்பானதா? லாப நோக்கம் கொண்டதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசன் திமுக கூட்டணி தற்போது தமிழ்நாட்டின் பேசு பொருளாகி இருக்கிறது. அவரை உணர்ந்தவர்கள் இது இயல்பான ஆதரவுதான் என்கிறார்கள்.

ஏற்கெனவே அவர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியின் யாத்திரையை ஆதரித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

திமுகவும் கமல்ஹாசன் ஆதரவை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளது. நாட்டின் பன்முகத்தன்மைக்கு உலைவைக்க பாஜக முயற்சி செய்கிறது. ஆகவேதான் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரிக்கிறேன் என்று கமல்ஹாசன் ஈரோட்டுக் கிழக்குத் தொகுதியில் நின்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் ஈரோட்டில் செய்த பிரச்சாரம் பல உண்மைகளை ஊருக்குமுன் போட்டு உடைத்திருக்கிறது. குறிப்பாக அவர் 'விஸ்வரூபம்' பிரச்சினைக்குப் பின்னால் நடந்த விவகாரங்களைப் போட்டு உடைத்துள்ளார்.

உண்மைகளை உடைத்த கமல்:

உண்மைகளை உடைத்த கமல்:

கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தின்போது பேசும்போது, "போனமுறை வந்தபோது வேறு சின்னத்திற்கு ஓட்டுக் கேட்டீர்கள். இந்த முறை வரும்போது வேறு சின்னத்திற்கு நீங்கள் ஓட்டுக் கேட்கிறீர்களே? என்று நீங்கள் என்னைப் பார்த்துக் கேட்கலாம். நாட்டுக்கு ஒரு ஆபத்து வரும்போது, சின்னம், கொடி, கொள்கை ஆகியவற்றை விட நாடுதான் முக்கியம். நமக்குள் இருக்கும் விவாதம் தொடரும்.

ஆனால், விவாதத்திற்கே இடமில்லாமல், நம் மொழியை, கலாச்சாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்த்துக் கொண்டிருக்கும் சக்தியை எதிர்க்க வேண்டிய தருணம் இது என்பதனால் நான் எல்லா கோடுகளையும் அழித்து விட்டு, எது நியாயமான பக்கம் முடிவுசெய்த பிறகுதான் ஈரோடு தொகுதிக்கு ஒட்டுக்கேட்க முடிவுசெய்திருக்கிறேன்.


மதச்சார்பற்ற நாடாக, இந்தியா திகழவேண்டும் என்றால் ஈரோட்டுத் தொகுதியில் காங்கிரஸை ஆதரிப்பதுதான் ஒரே வழி. பிரித்தாளும் சூழ்ச்சியை எல்லாம் இனிமேல் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது.

ஒரே பைஜாமா, ஒரே கொடி, ஒரே மொழி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. திராவிடம் என்பது நாடு தழுவியது. அதை நினைவுபடுத்துகின்ற பெருமை தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கிறது. ஜன கண மன என்று தேசிய கீதம் பாடுகின்றோமே அதில் வருகிறது திராவிடம். தேசிய கீதம் இருக்கின்றவரைத் திராவிடம் இருக்கும். நம் தேசமிருக்கின்றவரை இந்தப் பன்முகத்தன்மை இருக்கும். இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. என்னைப் போன்றவர்களின் ஆசை. அதனால்தான் இந்தக் கூட்டணியை ஆதரித்திருக்கிறேன்.

இந்தக் கூட்டணிக்குப் பெருந்தன்மையோடு என்னை அழைத்த தம்பி உதயநிதிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். நீங்கள் கேட்கலாம் இந்தக் கூட்டணியை முன்பே நீங்கள் விமர்சனம் செய்திருக்கிறீர்களே என்று? விமர்சனம் செய்வதுதான் ஜனநாயகம். கூட்டணி என்பது லாபத்திற்காக வைப்பதற்குப் பெயர் கூட்டணி இல்லை. நான் அப்படி இந்தக் கூட்டணியை வைக்கவில்லை. அதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கிறேன்.

விஸ்வரூபத்திற்கு துணைநின்ற கலைஞர்:

விஸ்வரூபத்திற்கு துணைநின்ற கலைஞர்:

எனது விஸ்வரூபம் படம் எடுக்கும்போது எனக்கு என்னென்ன இடைஞ்சல் கொடுக்க முடியுமோ அவ்வளவையும் கொடுத்துப் பார்த்தார்கள். உண்மை வெல்லும் என்று நான் உறுதியாக நம்பினேன். அப்போது அன்றைய திமுக தலைவர் மு.கருணாநிதி எனக்குத் தொலைப்பேசி செய்து, 'என்ன கமல்? உனக்கு ஒன்று என்றால் விட்டுவிடுவோமா? உனக்கு என்ன வேண்டும் சொல்? நாங்கள் உன்னுடன் நிற்கிறோம்' என்றார்.

அதற்கு நான், 'அய்யா இது எனக்கான பிரச்சினை. நீங்கள் மக்களுக்கான பிரச்சினையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே என் பிரச்சினையை நீங்கள் பார்க்க வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னால் முடியும் என்று நம்புகிறேன்' என்று சொன்னேன். அவர், 'அப்படியா? சரி. ஏதாவது வேண்டுமானால் என்னை அழைக்கவும்' என்றார்.

அவர் தொலைப்பேசியை வைத்த அரைமணி நேரத்தில் மு.க. ஸ்டாலின் அழைத்தார். 'நாங்கள் வர வேண்டும் என்று சொல்லுங்கள் வருகிறோம்' என்றார். அப்போது நான் வைத்திருந்தால் அது இலாபத்திற்கான கூட்டணி. ஆனால், நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். இப்போது மக்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது நான் யாருடன் கூட்டணி வைக்கவேண்டுமோ அங்கே வைத்திருக்கிறேன்.

தனித்தனி பிரிந்துகிடந்த சமஸ்தானங்களை ஒரு நாடாகச் சேர்த்துத் தைப்பதற்கு எனது அப்பா, தாத்தா எல்லாம் சேர்ந்து உழைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் அதில் பல மொழிகள் இருக்கும். பல மதங்கள் இருக்கும். பல நிறங்கள் இருக்கும். அவற்றை எல்லாம் ஒரே மிக்சியில் போட்டு ஒரே மாதிரியான ஆரஞ்சு கலர் ஜூஸ் உண்டாக்கக் கூடாது. அது சரியாக வராது எங்களுக்கு.

சிலருக்கு வெள்ளரிக்காய் பிடிக்கும். சிலருக்கு வேறு பழம் பிடிக்கும். வேறு மதம் பிடிக்கும். அதை எல்லாம் போட்டு அவியல் செய்தால் மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த உணர்வு இந்தியா முழுமைக்கும் புரிய ஆரம்பித்துள்ளது. அதில் முன்னோடிக் குரலாகத் தமிழ்நாடு இருக்க வேண்டும். அதுவே என் ஆசை" என்று பாஜகவின் பிரிவினைவாத போக்கை புட்டு புட்டு வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் திமுகவுடன் வைத்துள்ள கூட்டணி இயல்பானதா? அல்லது இலாப நோக்கம் கொண்டதா? என்ற கேள்விக்கு, அவரது கட்சியைச் சேர்ந்த சினேகன், "கடந்த 50 ஆண்டுகளாகத் திரையில் பேசிய அரசியலை, எங்கள் தலைவர் இப்போது தரையில் பேசுகிறார்" என்கிறார்.

மையப் புள்ளிக்கு வந்த கமல்:

மையப் புள்ளிக்கு வந்த கமல்:

மேலும் இந்தக் கூட்டணி குறித்து திமுக வழக்கறிஞர் சரவணன், "இந்தியாவின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டவர்கள் யாருமே பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள். கடந்த எல்லா தேர்தல்களிலும் திமுக எதை மையமாகக் கொண்டு உருவாக்கியது என்று பார்த்தால், அது மதச்சார்பற்ற கூட்டணி என்பதைத்தான் அடிப்படியாக வைத்து உருவாகியுள்ளது. அந்த மையத்தைத்தான் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொட்டு இருக்கிறார்.

ஹரியானாவில் பசு பாதுகாவலர் என்ற போர்வையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையில் மானு மானேசர் என்பவர் ஈடுபட்டு இருக்கிறார். அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஏனென்றால், அவர் பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார்.

ஆகவே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்தப் பாஜகவுடன்தான் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. முத்தலாக் சட்டத்திற்கு எதிராக திமுக வாக்களித்தது. நாங்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உள்ளோம் என்பதை அதன்மூலம் நிரூபித்தோம்.

அதேபோல சிஏஏ சட்டத்திற்குக் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்தோம். இப்படி இஸ்லாமியர்களுடன் தொடர்ந்து திமுக ஆதரித்துவருகிறது.

ஆக, 2024இல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்டின் மதச்சார்பின்மை காணாமல் போய்விடும். நடடின் பன்முகத்தன்மை என்ற அடையாளமே நாட்டில் இருக்காது. பாஜகவுக்குப் பன்முகத்தன்மை என்பது எட்டிக்காய். அதை உணர்ந்துதான் கமல்ஹாசன், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் வந்திருக்கிறார்.

யாருக்கும் தனித்துவம் இருக்கக்கூடாது. பல கலாச்சாரங்கள் இருக்கக் கூடாது. பல மதங்கள் இருக்கக் கூடாது. பல மொழிகள் பேசுபவர்களாக யாருமே இருக்கக் கூடாது. பல உணவுகளை உண்பவர்களாக யாரும் இருக்கவே கூடாது. எல்லோரும் ஒரே மாதிரி சப்பாத்திதான் சாப்பிட வேண்டும். எல்லோரும் ஒரே இந்தியைத்தான் பேச வேண்டும். எல்லாம் ஒரே கடவுளைத்தான் கும்பிட வேண்டும் என்ற கோட்பாட்டோடு இயங்கிக் கொண்டுள்ளது பாஜக.

இந்தப் பேராபத்தை உணர்ந்து, இந்தியா திரும்ப இவர்களின் கையில் சிக்கிக் கொண்டால் என்ன ஆகுமோ என்று பயந்துதான் கமல் இந்தக் கூட்டணியை ஆதரிக்கிறார்" என்கிறார்.

அவரிடம் இந்த அச்சம் அதிமுகவுக்கு இல்லையா? எனக் கேட்டால், "நல்ல கேள்வி. அவர்களுக்கு இருக்கின்ற ஒரே அச்சம் ரெய்டு. வருமானவரித்துறை ரெய்டு பற்றி யோசிக்கத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறது. கொள்ளையடித்துச் சேர்த்துவைத்துள்ள பணத்தைக் காப்பாற்ற வேண்டும். அவர்களுக்கு நாட்டைப்பற்றி ஒரு கவலையும் இருக்கிறது? நான் சொன்ன சட்டங்கள் குறித்து எல்லாம் அவர்கள் ஒரு கவலையும் படவில்லை. அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை" என்கிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் திருவள்ளூர் தென் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆ.பாசில், "இந்த இடைத்தேர்தல் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் மட்டும் முக்கியமானதல்ல; நம் இந்தியத் தேசத்திற்கே முக்கியமானது.

கமல் முடிவு இலாபம் சார்ந்ததா?

கமல் முடிவு இலாபம் சார்ந்ததா?

ஆகவேதான், இது ஒரு இடைத்தேர்தல்தானே என்று குறுக்கிப் பார்க்காமல், நாட்டையே அச்சுறுத்திவரும் மதவாத சக்திகளின் வெற்றியைத்தடுக்க வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் திமுக கூட்டணியை ஆதரிக்க முன்வந்திருக்கிறார்.

அதிமுகவில் யார் போட்டி இடவேண்டும்? எந்த அணியின் கட்டுப்பாட்டில் கட்சி இருக்க வேண்டும்? என அனைத்தையும் பாஜகதான் முடிவு செய்கிறது. பாஜக அதிமுக என்ற கருவியின் மூலம் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறது. பாஜக ஈரோட்டில் போட்டியிடுவதாகக் கூறினால், நான் எனது வேட்பாளரை வாபஸ் வாங்கிவிடுகிறேன் என்று சொன்னார்.

அதே மாதிரி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன்தான் கூட்டணி என்று இபிஎஸ் கூறுகிறார். இருவருமே போட்டிப் போட்டுக் கொண்டு பாஜகவை ஆதரிக்கிறார்கள். அதுதான் உண்மை.

கமல்ஹாசன் தனிப்பட்ட இலாபத்திற்காக இந்த இடைத்தேர்தலை ஆதரிக்கவில்லை. அதற்கான அவசியம் இல்லை. அவர் இலாபம் பார்த்துச் செயல்படுபவர் அல்ல. அவரை அறிந்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும்.

தான் சம்பாதித்த பல கோடிகளை அதே கலைத்துறையில் மீண்டும் மீண்டும் போட்டுப் பல நஷ்டங்களைப் பார்த்தவர். அவர் இலாபம் விரும்பி இருந்தால் வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பார். அவர் நஷ்டம் அடைந்தாலும் அவரால் கலைத்துறை உயர்வைப் பெற்றுள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த இடைத்தேர்தலில் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. நாட்டை சூழ உள்ள பேராபத்தை உணர்ந்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதுதான் உண்மை" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+