மாமி, சங்கி, குடிகாரி.. பொண்டாட்டியை இப்படி சொல்வார்களா திமுகவினர்..? காயத்ரி ரகுராம் ஆவேசம்
திமுக அரசு மீது பாஜகவின் காயத்ரி ரகுராம் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார்
சென்னை: போடி, வாடி மற்றும் அனைத்து பீப் வார்த்தைகளையும் தங்கள் மனைவி சகோதரிகள் அல்லது நண்பர்களுடன் பயன்படுத்த திமுகவுக்கு தைரியம் இல்லை. தி.மு.க கோழைகள். என்னை சொந்தம் கொண்டாடுவது போல் ஆன்லைனில் பீப் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்" என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டை வீசியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே, அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் பாஜகவின் கலை கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம்..
இதுவரை திமுக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள், அறிவிப்புகளுக்கு தன்னுடைய கண்டனத்தையும் வெளிப்படையாகவே சொல்லி வருபவர்.

பஞ்சாப் பயணம்
அதிலும் முதல்வர் ஸ்டாலினிடம் இவர் கேட்ட கேள்விகள்தான் அதிகம்.. "பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னார்கள்.. ஆனால் இப்போது வரை மக்களை ஏமாற்றி விட்டார்கள்.. மக்கள் இப்போதுள்ள அரசு மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்..

இந்து பண்டிகைகள்
இந்து பண்டிகைகள் எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போது மட்டும் திமுக ஊரடங்கு போடுகிறது.. அவர்கள் எப்போதும் இந்துகளுக்கு எதிராக தான் செயல்படுகிறார்கள்.. கொரோனா பரவலை காரணம் காட்டி கோயில்களை வெள்ளி, சனி, ஞாயிறு, கிழமைகளில் மூடினார்களே, டாஸ்மாக் கடைகளை ஏன் திறந்து வைத்திருக்கிறார்கள்.. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்வாரா?" என்று காயத்ரி கேட்ட கேள்விகள் அதிகம். சில சமயம் இவரது கேள்வி உதயநிதியை நோக்கியும் பாயும்..

உதயநிதி ஸ்டாலின்
"விநாயகர் சதுர்த்தி, உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம்.... ஆனால், ஒவ்வொரு ஹிந்துகளும் நம்பும் கலாசாரம், பண்பாடு, உணர்வு... கோடிக்கணக்கான தமிழ் மக்களை காயப்படுத்த, தீய கொள்கையை மக்களிடம் திமுக திணிக்கிறது.. அரசின் நடவடிக்கை, விநாயகர் சிலைகளை செய்பவர்களையும், கொண்டாடும் பல கலைஞர்களையும் வெகுவாக பாதிக்கிறது... இது, அவர்களின் வயிற்றில் அடிப்பது போல உள்ளது. விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன்?.. இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் இல்லை என்றால் இந்து வாக்குகள் இல்லை. இந்துக்கள் திமுகவுக்கு வாக்களிக்க கூடாது" என்று ட்வீட்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

காய்கறி மாமி
இப்போதும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. "குடிகாரி திட்டு அல்லது காய்கறி திட்டு, மாமி திட்டு அல்லது சாமி திட்டு, சங்கி திட்டு அல்லது ராங்கி திட்டு.. திமுக ட்ரோல்கள் தர்க்கரீதியான பதில்களை அல்லது ஆக்கபூர்வமான விமர்சனங்களைப் பேசுவதில்லை. போடி, வாடி மற்றும் அனைத்து பீப் வார்த்தைகளையும் தங்கள் மனைவி சகோதரிகள் அல்லது நண்பர்களுடன் பயன்படுத்த அவர்களுக்கு தைரியம் இல்லை. துடைப்பத்தால் அடிப்பார்கள். தி.மு.க கோழைகள்.

தாங்க மாட்டாய்
என்னை சொந்தம் கொண்டாடுவது போல் ஆன்லைனில் பீப் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். நான் உன்னை ஒரு வார்த்தை கூப்பிடுகிறேன், அதை நீ தாங்கமாட்டாய். சுதந்திரத்திற்கு ஒரு எல்லை உண்டு. உனக்கு யாரும் சொந்தமில்லை யாரையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதே. கர்மா வேறு ஏதாவது மூலம் திரும்ப வரும்" என்று பதிவிட்டுள்ளார்.

சித்தாந்தம்
இதற்கு திமுகவினர் திரண்டு வந்து, நாங்கள் ஏன் என் மனைவி, சகோதரிகளை அப்படி கூப்பிட போகிறோம்? உங்கள் மனம் புண்பட்டிருப்பதை என்னால் உணரமுடிகிரது. இங்கு நீங்கள் வாங்கும் வசவுகள் உங்களுக்காக அல்ல... நீங்கள் முகவராக செயல்படும் சித்தாந்தத்திற்காக... மனசாட்சிக்கு விரோதமாக நீங்கள் தூண்டும் மதவெறி/மதக்கலவரங்களால் பாதிக்கப்படுவோரின் வேதனைகளை விட உங்கள் வருத்தம் பெரிதல்ல" என்று பதிலளித்து வருகின்றனர்












Click it and Unblock the Notifications