சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கண்ணாடி கதவு".. அப்பாயிண்ட்மென்ட் தரல.. வீடியோ போட்ட பெண் நிர்வாகி.. ஷாக் தந்த கமலாலயம்.. இது எப்போ

திருவாரூர் மாவட்ட பாஜக பெண் நிர்வாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திருவாரூர் மாவட்ட பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவர் சுதந்திரா தேவியின், சர்ச்சை வீடியோ ஒன்று இணையத்தில் பரவிவர, அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்துவிட்டதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்ட பாஜக பெண் நிர்வாகி சுதந்திரா தேவி.. இவர் வெளியிட்டிருந்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..

அந்த வீடியோவில் சில குற்றச்சாட்டுகளை கட்சி மீது வைத்துள்ளார்.. "தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பெண் நிர்வாகிகள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்..

இன்று நான்.. நாளை யாரோ? பாஜக தொண்டர்களை நினைத்தால் தான்.. வானதி கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதில்இன்று நான்.. நாளை யாரோ? பாஜக தொண்டர்களை நினைத்தால் தான்.. வானதி கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதில்

சாம்ராஜ்ஜியம்

சாம்ராஜ்ஜியம்

அவர்கள் மீது கைகள் ஓங்கப்படுகிறது.. கட்சி தலைவர் அண்ணாமலையை பார்க்க செல்லும் பெண்களை அங்குள்ள ஆண் நிர்வாகிகள் தடுக்கிறார்கள்.. அதை பற்றி முறையிட்டால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.. கமலாலயத்தில் உள்ள ஊழியர்கள், நிர்வாகிகள் அவர்களுக்கு தேவைப்படும் பெண்களை மட்டும் உள்ளே அனுமதிக்கிறார்கள்.. அண்ணாமலைக்கு தெரியாமல் ஒரு தனி சாம்ராஜ்யமே அங்கு நடக்கிறது.. அது அண்ணாமலையின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். கமலாலயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் செயல்களை அண்ணாமலை கவனிக்க வேண்டும்... இல்லாவிட்டால் உங்களுக்கு தான் பிரச்சினை" என்பது உட்பட பல்வேறு புகார்களை கூறியிருந்தார்.

கமலாலயம்

கமலாலயம்

அதுமட்டுமல்ல, இந்த நிகழ்வுகளை எல்லாம், சுதந்திரா தேவி ஏற்கனவே அண்ணாமலையிடம் புகார் கொடுத்ததாகவும், ஆனால் அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறுகிறார்.. இந்த வீடியோ வெளியானதை அடுத்து திருவாரூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சுதந்திரா தேவி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்த விளக்கம் ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

"திருவாரூரை சேர்ந்த முன்னாள் மகளிர் அணி நிர்வாகி செல்வி. சுதந்திரா அவர்கள் கடந்த வருடமே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்! கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தினால் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த வருடமே கட்சியில் இருந்து பெண் நிர்வாகி நீக்கப்பட்ட நிலையில், திடீரென அவரது புகார் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

 கெட்ட கெட்ட வார்த்தை

கெட்ட கெட்ட வார்த்தை

மற்றொருபக்கம் கட்சி தலைமையின் இந்த நடவடிக்கை, விமர்சிக்கப்பட்டும் வருகிறது.. குற்றச்சாட்டுகளை பாஜகவின் பெண் நிர்வாகிகள் கூறினால், அதுகுறித்து எந்தவிசாரணையும், நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, மாறாக அப்பெண் நிர்வாகிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிடுகிறார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.. திருச்சி சூர்யா விவகாரத்தில், ஆபாசமாக பேசிய சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல், அது குறித்து கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராமை கட்சியின் தலைவர் அண்ணாமலை 6 மாசத்துக்கு சஸ்பெண்ட் செய்த விவகாரம், கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகளுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், சுதந்திரா தேவி விவகாரமும் இதில் இணைந்துள்ளது..

 டாக்டர் ஷர்மிளா

டாக்டர் ஷர்மிளா

சில தினங்களுக்கு முன்பு நம் ஒன் இந்தியா தமிழுக்கு, திமுக ஆதரவாளரான டாக்டர் ஷர்மிளா ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "எந்த ஒரு விளக்கத்தையும் காயத்ரியிடம் கேட்காமல் சஸ்பெண்ட் செய்துள்ளது, ஒருதலைப்பட்சமாக தெரிகிறது.. என்னதான் பிரச்சனை என்று கட்சி அவரிடம் விசாரித்திருக்கலாம்.. அசிங்கமாக ஒரு ஆடியோ வெளியாகி உள்ளபோது, அதை விசாரிப்பதற்காக, ஒரு குழுவை போட்டு, இரு தரப்பிலும் என்ன நடந்துள்ளது என்பதை கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என்றெல்லாம் தெளிவாக பேசும் அண்ணாமலை, காயத்ரி விஷயத்தையும் விசாரிக்கலாமே? இதுக்கும் ஒரு குழுவை போட வேண்டியதுதானே? விசாரித்துவிட்டு எங்கே தப்பு நடந்திருக்கிறது என்று தெளிவாக கண்டுபிடிக்கலாமே? ஆனால், விசாரிக்க அவர் தயாரில்லை.. காயத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட தயாரில்லை..

 கண்ணாடி கதவுகள்

கண்ணாடி கதவுகள்

"என் அலுவலகத்தில் கண்ணாடி கதவுகளாக மாற்றிவிட்டேன், குஷ்பு, காயத்ரி ரகுராம், பாஜக ஆபீசுக்கு வந்தால் உள்ளே என்ன நடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்று அண்ணாமலை ஒருமுறை சொன்னாரே.. அப்படி என்றால், அந்த கட்சி ஆபீசின் உள்ளே, இதற்கு முன்னாடி என்ன நடந்தது என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக நாம் எடுத்து கொள்ளலாமா? குஷ்பு, காயத்ரியை போன்றோர்களை பற்றி என்ன மதிப்பீடுகளை அண்ணாமலை வைத்துள்ளார்? நடிகைகள் என்றாலே எப்படிப்பட்ட இவர் மதிப்பீடுகளை வைத்துள்ளார் என்பதையும் இது யோசிக்க வைத்துள்ளது.." என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

English summary
Has TN BJP sacked Tiruvarur women executives, and what happened actually in the party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X