சென்னை அசோக் நகரில் புதிய சுற்றுலா தலமாக உருவெடுத்த பேய் வீடு.. போலீஸ் செய்த தரமான சம்பவம்
சென்னை: டிமான்டி காலணி படத்தில் சென்னையில் உள்ள பழைய பாழடைந்த வீட்டில் பேய் இருப்பது போன்று காட்சிப்படுத்தி இருப்பார்கள். அந்த படம் இரண்டு பாகமாக வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனிடையே அதேபோன்று அசோக் நகரில் அமைந்துள்ள பாழடைந்த வீடு ஒன்றில் நிற்க வைத்திருக்கும் பழைய கார், பழைய போட்டோக்கள், பொருட்கள் சிதைந்த நிலையில் கிடப்பதை இளைஞர்கள் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இப்போது ஊரே அசோக் நகர் வீட்டிற்கு போய் ரீல்ஸ் போட தொடங்கி உள்ளது.இதனால் இப்போது ட்டூரிஸ்ட் பாட் போல் மாறிவிட்டது. இது போலீசுக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது.
பேய் பங்களா என்றால் பொதுவாக காட்டுப்பகுதியில் அல்லது கிராமங்களில் ஆள் ஆரவாரமற்ற இடங்கள் தான் என்று பலரது மனதில் இருந்தது. ஆனால் சென்னை போன்ற பரபரப்பான நகரத்தில் முக்கியமான ஏரியாக்களில் பாழடைந்த வீடுகளையே பேய் வீடு போல் உள்ளதாக காட்டிய படம் டிமான்டி காலணி..

டிமான்டி காலணி வெற்றி
டிமாண்டி காலணி திரைப்படம் வெளியானபோது, அது தமிழ் சினிமாவில் பேய் மற்றும் திகில் படங்களுக்கான ஒரு புதிய அலையை உருவாக்கியது. டிமான்டி காலணி வணிக ரீதியாக பெரிய வெற்றி பெற்றதால், தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பல பேய் படங்கள் உருவாக இது ஒரு தூண்டுகோலாக அமைந்தது. மக்கள் மத்தியில் த்ரில்லர் மற்றும் ஹாரர் கதைகள் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் உண்மையில் இருக்கும் டிமான்டி காலணியை மையமாக வைத்து கதை நகர்ந்ததால், இளைஞர்கள் மத்தியில் அந்த இடத்தை நேரில் சென்று பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது. அதேபோன்ற ஒரு வீட்டின் ரீல்ஸ் வெளியிடும் யூடியூபர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அசோக் நகர் பேய் வீடு
சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்றான அசோக் நகர் எப்போதுமே போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியாகும். அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் அதிக அளவில் இருக்கும். இது விஐபி ஏரியா போல் அருமையாக இருக்கும். அந்த அசோக் நகரில் பல்வேறு குடியிருப்புகளுக்கு நடுவே கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஒரு வீடு பூட்டியே கிடக்கிறது. வீட்டின் முன்பு துருப்பிடித்த பழைய கார், ஒட்டடை படிந்து சிதைந்த சுவற்றில் பழைய புகைப்படங்கள், வீடு முழுக்க சிதறிக் கிடக்கும் பொருட்கள் என பார்ப்பதற்கே திகிலூட்டும் வண்ணம் அந்த வீடு இருக்கும்.
டூரிஸ்ட் ஸ்பாட்
அசோக் நகர் வீடு இப்படி பாழடைந்து கிடந்தாலும், அந்த வீட்டை யாரும் கண்டுகொள்ளவில்லை.. ஆனால் யூடியூபர்கள், இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் திடீரென அந்த வீட்டின் முன்பு வெளியிடும் ரீல்ஸ்கள் காரணமாக இப்போது சென்னையின் மினி பேய் வீடு ட்டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறி உள்ளது. அந்த வீடு கடந்த 2008ம் ஆண்டு முதல் பூட்டி கிடக்கிறது.
அங்கு எம்.ஜி.ஆர் காலத்தில் கனிமவளத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற சரவணன் என்பவர் தனது மனைவி கஸ்தூரியுடன் அசோக் நகரில் உள்ள இந்த பங்களாவில் வசித்து வந்துள்ளார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை .சரவணன் தனது வீட்டில் பணம் மற்றும் நகையை சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு சரவணன், அவரது மனைவி கஸ்தூரி, பணிப்பெண் அன்பரசி ஆகியோர் மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வீட்டிற்குள் இறந்து கிடந்திருக்கிறார்கள். வீட்டில் இருந்த நகைகள், அமெரிக்க டாலர்கள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
18 வருடங்களாக அப்படியே இருக்கிறது
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் கொள்ளையர்கள் 4 பேரை கைது செய்தனர். பணம் மற்றும் கொலைக்காக மட்டுமே இந்த கொலை நடந்தது விசாரணையில் அப்போது தெரியவந்தது. ஒரே நாளில் நடைபெற்ற 3 கொலைகளுக்கு பிறகு அந்த வீட்டில் யாருமே வரவில்லை. அங்கு கொலைகள் நடந்து 18 வருடங்களாகியும் வீடு அப்படியே பாழடைந்து இருக்கிறது கொலையின்போது வீட்டிலிருந்த பொருட்கள் எப்படி சிதறிக் கிடந்ததோ அவை இன்றும் இருக்கிறது வீட்டின் முன்பு கார் துருப்பிடித்த நிலையில் நிற்கிறது. வீட்டிற்குள் எம்ஜிஆருடன் சரவணன் எடுத்திருந்த புகைப்படங்களும் உள்ளன.
யூடியூபர்கள் சாகசம்
இத்தனை நாட்களாக அந்த வீட்டிற்குள் போக யாருமே போகவில்லை. ஆனால் இப்போதுள்ள சில இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தால் அந்த வீட்டிற்குள் சென்று அந்த வீட்டின் நிலையை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்கள். அந்த வீடியோக்கள் டிரெண்ட் ஆக ஆரம்பித்தது. இதனால் பல யூடியூபர்கள், இன்ஸ்டா இன்புளுயர்சர்கள் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதாக கூறி பேய் வீடு பாணியில் வீடியோ உருவாக்கி பதிவிட்டு வியூஸ்களை அள்ளுகிறார்கள். இதனால் மக்களிடையே அந்த வீடு குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது.
பேய் வீடு சுற்றுலா
பலரும் அசோகர் நகர் பேய் வீட்டிற்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். ஒரு சிலர் அத்துமீறி வீட்டிற்குள் சுவர் ஏறி நுழைந்து ரீல்ஸ் எடுத்து போடுகிறார்கள். இதனிடையே இளைஞர்கள் அந்த வீட்டிற்குள் நுழையாதபடி உரிய பாதுகாப்பை போலீசார் ஏற்படுத்த வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, யாரும் அந்த வீட்டிற்குள் யாருமே நுழைய முடியாதபடி, தகரசீட்டுகளை வைத்து மூடியுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications