"அல்லாடுதே" அதிமுக.. படக்குனு திமுக பக்கம் வண்டிய திருப்பிட்டாரே எடப்பாடி பழனிசாமி.. அரண்ட சீனியர்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகம் வேகம் எடுத்துள்ளது.. இது தொடர்பாக சில பிரத்யேகமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. தற்சமயம் திமுக மட்டுமே பலமான கூட்டணியை வைத்திருக்கிறது.. இனி, இன்னும் 2 கட்சிகள் திமுக கூட்டணியில் புதிதாக சேர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். இப்படியொரு பலம் வாய்ந்த கூட்டணிக்கு எதிராக மாற்று கூட்டணி இன்னும் தமிழகத்தில் உருவாகவில்லை.

Have alliance problems escalated for Edappadi Palaniswami and Controversy in AIADMK Sr Executives

மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து 2 வருடம் ஆக போகிறது.. ஆனால், இன்னும் எந்த ஒரு கட்சியுமே உறுதியாக கூட்டணிக்கான ஆதரவை அறிவிக்கவில்லை.

மெகா கூட்டணி: இப்படிப்பட்ட சூழலில்தான், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் நீண்ட ஆலோசனையை நேற்று முன் தினம் நடத்தியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லையே என்று முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியிடம் கேட்டிருக்கிறார்கள்.. ஆனாலும் அதை கேட்டு எடப்பாடி அதிர்ச்சியடையவில்லையாம்.

பொறுத்திருங்கள் - நிச்சயம் கூட்டணி அமையும்.. இப்போதே சில ரகசியங்களை அம்பலப்படுத்திவிட்டால் கூட்டணியை சீர்குலைக்க திமுக திட்டமிடும். அதனால் பொறுமையாக இருங்கள் என்று தெளிவுப்படுத்தினாராம் எடப்பாடி பழனிசாமி.

லிஸ்ட் ரெடி: அதுமட்டுமல்ல, "நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியான வேட்பாளர்கள் என்று, நான் ஒரு லிஸ்ட் தயாரித்திருக்கிறேன். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அல்லது நீங்கள் பரிந்துரை செய்யுங்கள்.. அந்த வேட்பாளர்கள் தகுதியானவர்களா என ஆலோசிப்போம்" என்றெல்லாம் சொன்னாராம் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த முறை யாருக்கு சீட் ஒதுக்கப்பட்டாலும் முன்கூட்டியே அவர்கள் கட்சியில் 20 கோடி ரூபாய் கட்ட வேண்டும். தேர்தல் செலவுகளை கட்சி பார்த்துக்கொள்ளும். சீட் வாங்குவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், சீட் கிடைத்ததும் அவர்கள் செலவு செய்வதில்லை. மாறாக, கட்சியிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் இந்த தேர்தலில் நடக்கக்கூடாது" என்றும் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

திமுக பாணி: அதற்கு முன்னாள் அமைச்சர்கள், "தகுதியான, செல்வாக்கு வாய்ந்த வேட்பாளர் நமக்கு கிடைப்பார்... ஆனால், அவர்களால் இந்தளவுக்கு செலவு செய்ய முடியாது. பொருளாதார நெருக்கடி இருக்கும். அவர்களால் எப்படி நீங்கள் கேட்கும் தொகையை கட்ட முடியும்? இது திமுக பாணி அரசியலாக இருக்கிறது.

திமுகவில்தான், தேர்தலுக்காக செலவு செய்ய முடியும் என்று சீட் கேட்டு விண்ணப்பித்தவர்கள் சொல்லும் தொகையை முன்கூட்டியே கட்சி தலைமையிடம் கட்ட சொல்வார்கள். அதே மாதிரி இல்லே இருக்கு'' என்று மறுத்து பேசியிருக்கிறார்கள். ஆனால், இதற்கும் சில விளக்கங்களை சொன்னாராம் எடப்பாடி பழனிசாமி.

ஆதரவாளர்கள்: எனினும், அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைகிறதா? இல்லையா? என கவனித்து, அதன்பிறகு தங்களின் ஆதரவாளர்களை பரிந்துரைக்கலாம்.. கூட்டணி அமையாமல் அதிமுக தனிமைப்படுத்தப்பட்டால், அமைதியாக இருந்து விடலாம் என்கிற முடிவில் இருக்கிறார்களாம்" மாஜி மந்திரிகள்.

இதனிடையே, கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டி விட்டிருக்க கூடாது என்று அதிமுகவிலுள்ள பாஜக ஆதரவு சீனியர்கள் சிலர் புலம்ப துவங்கியிருக்கிறார்களாம்.. சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற வேண்டுமானால், பாஜக கூட்டணியிலிருக்கும்வரை அது நடக்காது என்று இதே அதிமுக சீனியர்களில் மற்றொரு தரப்பினர் கூறிவருகிறார்கள். எனினும், அதிமுகவிலிருக்கும், பாஜக ஆதரவு "தலை"கள் என்ன முடிவெடுக்க போகிறார்களோ? என்பதும் சஸ்பென்ஸாகவே உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+