சென்னை வண்டலூர் டூ மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போயிருக்கீங்களா? எத்தனை டோல்கேட் இருக்கு தெரியுமா?
சென்னை: சென்னை மாநகரத்தை சுங்கச்சாவடிகளின் தலைநகரம் என்றே சொல்லலாம்.. ஏராளமான சுங்கச்சாவடிகள் வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை உள்ள வெளிவட்ட சாலையில் இருக்கின்றன. சென்னையை சுற்றியுள்ள இரண்டு பைப்பாஸ் சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் மிக அதிகமாகவே இருக்கின்றன.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு புதிதாக போடப்பட்டு வரும் அதிவிரைவு சாலையில் வெறும் 100 கிலோமீட்டருக்கு ஆறு சுங்கச்சாவடிகளை மத்திய நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் நான்கு வழிச்சாலை,ஆறு வழிச்சாலை, 8 வழிச்சாலை என புதிய சாலைகள் போடப்பட்டள்ளது. இப்படி போடப்பட்ட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் தமிழ்நாடு முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.

இந்நிலையில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாகும்.. அதேபோல் 15 ஆண்டுகளை கடந்த காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்பதும் மத்திய அரசின் விதியாகும். இதன்படி பார்த்தால் தமிழகத்தில் மொத்தம் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை கண்டிப்பாக மூட வேண்டும். ஆனால் மாறாக புதிய சுங்கச்சாவடிகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டு வருகிறது. அண்மையில் நத்தம் -மதுரை சுங்கச்சாவடி திறக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம், தமிழ்நாட்டில் எந்த சுங்கச்சாவடியிலும் இல்லாத கட்டணம் ஆகும்.. அந்த அளவிற்கு வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் வேதனையில் உள்ளனர்.
இந்த சூழலில் நாட்டிலேயே அதிகபட்ச சுங்கச்சாவடிகள் உள்ள மாநிலங்களில் 3வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் புதிதாக 20 சுங்ச்சாவடிகள் திறக்க மத்திய அரசின்தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டிருப்பதாக வெளியாக தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர்-சென்னை விரைவு சாலையில் 6, விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3, விக்கிரவாண்டி-நாகை நெடுஞ்சாலையில் 3, ஓசூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3, சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3, மகாபலிபுரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் பெங்களூர்-சென்னை விரைவு சாலையை பொறுத்தவரை வெறும் 100 கிலோ மீட்டருக்கு 6 சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு 15 கிலோ மீட்டருக்கும் ஒரு சுங்கச்சாவடியா என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகிறார்கள்..

சுங்கச்சாவடிகள் குறித்து பலரும் கேள்வி எழுப்பும் நிலையில், சென்னையில் வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை உள்ள வெளிவட்ட சாலையில் பயணித்திருந்தால் மயக்கமே போட்டுவிடுவார்கள்.. அந்த அளவிற்கு அங்கு சுங்கச்சாவடிகள் உள்ளது. சரியா கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலின் எதிரே ஏறும் சென்னை வெளிவட்ட சாலையில், முடிச்சூரை கடந்த உடன் சுங்கச்சாவடி இருக்கும். தாம்பரம் பகுதியில் இருந்து வந்து இந்த சாலையில் ஏறுவோர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும்.
அடுத்தாக பூந்தமல்லி சந்திப்பில் ஒரு சுங்கச்சாவடி இருக்கும். பெங்களூர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக அதை அமைத்திருப்பார்கள். அடுத்தாக பட்டாபிராம் மற்றும் ஆவடியில் இருந்து வருவோரை குறிவைத்து பழவேடு பகுதியில் சுங்கச்சாவடி இருக்கும். அது முடிந்து ஆந்திராவிற்கு செல்ல கீழே இறங்கினால் அங்குமே இறங்கிய உடன் சுங்கச்சாவடி இருக்கம். அடுத்ததாக இறங்காமல் நேராக மீஞ்சூரை நோக்கி சென்றால், மீஞ்சூர் அருகே ஒரு சுங்கச்சாவடி இருக்கும்.












Click it and Unblock the Notifications