சென்னையில் சொத்து வாங்கி போட்டிருக்கீங்களா? கண்டிப்பாக இதை பாருங்க.. அதிர வைத்த தம்பதி
சென்னை: சென்னை பாரிமுனையில் ராஜஸ்தானைச் சேர்ந்தவரின் இடத்தை ஆள்மாறாட்டம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் சொத்து வாங்கி போட்டிருப்பவர்கள் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும்.. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சொத்து வாங்கி போட்டிருப்பவர்கள் வெளியூர்களில் வசித்தால், தங்கள் நிலம் அல்லது இடத்தை பாதுகாப்பு வேலி போட்டு பாதுகாக்க வேண்டும்.. குறிப்பாக தடுப்பு சுவர் அமைத்து இடத்தை பாதுகாப்பது நல்லது. அதேபோல் இடத்தை அவ்வப்போது வந்து பார்த்து யாரும் ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்..

ஏனெனில் வெளியூர்களில் வசிப்பவர்களின் நிலம் அல்லது இடத்தை போலி ஆவணங்கள் மூலம் பறிக்கும் கும்பல்கள் உலாவுகின்றன.. அரசு சொத்துக்களையே, தங்கள் பெயரில் மாற்றி பட்டா போடுவதையே கைவந்த கலையாக செய்பவர்களும் இங்கு உள்ளனர். சென்னையில் சொத்து மதிப்பு கோடிகளை தாண்டிவிட்டதால் அதனை எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசையில் தவறான வழிகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்.. அப்படித்தான் சென்னை பாரிமுனையில் நடந்துள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நிரஞ்சன் என்பவர் அண்மையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் நிரஞ்சன் கூறியிருந்தாவது: சென்னை பாரிமுனை தம்பு நாயக்கன் தெருவில் என்னுடைய தந்தை சாந்திலால் கடந்த 1995-ம் ஆண்டு சொந்தமாக இடம் வாங்கினார். அவர் 2011-ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன்பின்னர் நாங்கள் எங்கள் சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு போய்விட்டோம்..
எங்கள் நிலத்தை உறவினர் ரங்கோட் சிங்கின் பராமரிப்பில் விட்டு சென்றிருந்தார. ஆனால் அவர் தனது மனைவி ஜந்தா தேவியுடன் ஆள்மாறாட்டம் மூலம் எங்கள் நிலத்தை அபகரித்துவிட்டார். தற்போது இந்த நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். எனவே எங்கள் நிலத்தை அபகரித்த அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு நில மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். இதில் ரங்கோட் சிங்கின் மனைவி ஜந்தா தேவி புகார்தாரர் நிரஞ்சனின் தாயார் பாமிரிபாய் போன்றும், ரங்கோட் சிங் நிரஞ்சனின் சகோதரர் ஜித்தேந்திர குமார் போன்றும் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சவுகார்ப்பேட்டையை சேர்ந்த ரங்கோட் சிங் (வயது 47), அவரது மனைவி ஜந்தா தேவி (44) ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜாபால், இன்ஸ்பெக்டர் அருண் அடங்கிய தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை பாரிமுனையில் ஆள்மாறாட்டம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பாதுகாத்தவரே பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications