கோயில் நிலங்களை வாங்கியிருக்கீங்களா.. பத்திரப்பதிவு விஷயம்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவு
சென்னை: சட்டவிரோதமாக கோயில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதை தடுக்கும் வகையில் அனைத்து பதிவுத் துறை அதிகாரிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இந்த உத்தரவை ஆறு மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மணிகண்டன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த அம்மாயி அம்மாள் என்பவர் அடையாறில் உள்ள தனது இடத்தை எழுதி வைத்திருந்தார்.

ஆனால் அம்மாயி அம்மாள் அவர்களால்,கோயிலுக்கு கொடுக்கப்பட்ட சென்னை அடையாறு நிலம் சட்டவிரோதமாகஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்க கோரி மனுவும்முறைப்படி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று மனுவில் மணிகண்டன் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அடையாறில் உள்ள அம்மாயி அவர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டது. இந்த நிலம் மீட்கப்பட்டு கோயில் பயன்பாட்டுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முக்கியமான சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி, "அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான அனைத்து ஆவணங்களையும் சேகரிக்க வேண்டும். வருவாய் துறை ஆவணங்களுடன் சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். அதன்படி, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கோயில் நிலங்களை சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்வதை தடுக்கும் வகையில் உடனடியாக அனைத்து பதிவுத் துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இந்த உத்தரவை ஆறு மாதங்களில் அமல்படுத்த வேண்டும்" இவ்வாறு தனது உத்தரவில் உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த எஸ்.எம்.சுப்ரமணியம் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக வேறு ஒரு வழக்கில் கோயில் நிலங்கள் தொடர்பாக முக்கியமான உத்தரவை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை 18ம் தேதி முன்பு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணை வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கிறஞர் வாதிடுகையில், குறிப்பிட்ட அந்த நிலம், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் எனவும், அதனால் அதற்கு பட்டா வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.
இந்த பின்னணியில் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கோயில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
இதையடுத்து, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், தமிழகம் முழுவதும் கோயில் நிலங்கள், அறநிலையத் துறைக்கு தெரியாமல், அறங்காவலர்களால் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக அறநிலையத் துறை விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, நிலங்களை தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராசை பிடித்த சிலரின் இந்த மோசடியில் நிலங்களை வாங்கியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று கூறியிருந்தார். மேலும் குறிப்பிட்ட நபரின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications