“சூப்பர்”.. தமிழ்நாடு புதிய தலைமை செயலாளரை பாராட்டிய உயர்நீதிமன்றம்! அந்த சுற்றறிக்கைதான் காரணமாம்
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அனைத்து துறை செயலாளருக்கும் சுற்றறிக்கை அனுப்பிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்து உள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தனக்கு வழங்க வேண்டிய பணி உயர்வு பண பலன் முறையாக வழங்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந் 2021 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் மனுதாரர், "தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதி பஞ்சாயத்து நிர்வாக இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் எனக்கு வழங்க வேண்டிய உரிய பணி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2016 வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எனக்கு பணி வழங்கி பணி நீக்கம் செய்யப்பட்ட இடைப்பட்ட காலத்திற்கு 25% ஊதியம் வழங்கவும் கடந்ர 2020 ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவு தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம், "ஐஏஎஸ் ஆட்சி பணி மூத்த தலைமை அதிகாரி எதிர்மனுதாரராக இருந்தும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போது வரை எந்தவித பதில் மனுவோ விளக்கமோ அளிக்கப்படவில்லை. இதிலிருந்து நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஆச்சரியமாகவும் விசித்திரமாகவும் உள்ளது.
எனவே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா (அப்போதைய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்) தற்போது தமிழக தலைமை செயலாளராக உள்ள சிவதாஸ் மீனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பட்டு தேவானந் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தலைமைச் செயலர் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க கோரி மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு அதில் ஏதேனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தால் உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அந்த வழக்கில் ஏதேனும் மேல்முறையீடு செய்வதாக இருந்தால் உடனடியாக அரசு வழக்கறிஞரை அனுகி சட்ட ஆலோசனைகளைப் பெற்று உடனடியாக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.
மேல் முறையீடு செய்ய முடியாத வழக்குகளில் உடனடியாக நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாட்டின் தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி அறிக்கையை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சுற்றி அறிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலர் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications