வடகலை தென்கலை வழக்கு.. ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை
Subscribe to Oneindia Tamil
மதுரை: தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை மீண்டும் நிறுவக் கோரி தொடர்ந்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வல்லம் ஸ்ரீநரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கை வைகானச ஆகமத்தை பின்பற்றி நடத்த இடைக்கால தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு தொடர்ந்த கும்பகோணத்தை சேர்ந்த பத்ரி நாராயணன் என்பவருக்கு ஐகோர்ட் கிளை ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. கோயிலில் வடகலை முறை இருந்ததற்கான எந்த ஆவணமும் மனுதாரர் பத்ரி நாராயணன் அளிக்காமல், கடைசி நேரத்தில் நீதிமன்றம் வந்துள்ளதாகக் கூறி அபராதம் விதித்து அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications