ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனு.. காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை கைதி ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீது 4 வாரங்களில் பதில் அளிக்க காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

சென்னை காவல் ஆணையரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரனின் தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில், அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 37 குற்ற வழக்குகள் ஞானசேகர் மீது பதியப்பட்டது. இதில் 5 வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சில வழக்குகளில் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பல வழக்குகள் இன்னும் விசாரணை நிலையில் உள்ளது. இதே போன்ற தன்மையுடைய வழக்குகளில் ஏற்கனவே ஞானசேகரன் ஈடுபட்டு அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவொரு கருணையும் காட்ட முடியாது என மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கை அடிப்படையாக வைத்து தான் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார், தற்போது, அந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு நீடிக்க வேண்டுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை கைதி ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications