சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீதிபதிகள் வாய்மொழியாகக் கூறியதை ஊடகங்கள் வெளியிடக் கூடாதா? தேர்தல் ஆணையத்தை கேட்ட ஹைகோர்ட்

நீதிபதிகள் வாய்மொழியாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக குற்றம்சாட்டி கூறியதை வைத்து ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முன்வைத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது குறித்த வழக்கில் நீதிபதிகள் வாய்மொழியாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக குற்றம்சாட்டி கூறியதை வைத்து ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முன்வைத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையை எதிர்கொள்வதில் மாநில அரசு தயார்நிலையில் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அந்த வழக்கு விசாரணையின்போது ஏப்ரல் 26ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வாய்மொழி வழியாக கருத்து தெரிவித்தது.

HC says Election Commissions concerns on murder charge comment, media sensationalism

இன்றைய நிலைமைக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு. தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிய நேரிடும்" என்று உயர் நீதிமன்றம் வாய்மொழியாக தெரித்ததை செய்தியாக வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி கூறினார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம், நீதிமன்ற நடவடிக்கைகளின்போது மேற்கொள்ளப்படும் வாய்மொழி வழியான விசாரணைகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுகளை அல்லது தீர்ப்புகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஊடக நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரியது.

இருக்குற வேலையைப் பாருங்க.. அப்புறம் 'பஞ்சாயத்து' பேசிக்கலாம் - 'குட்டு' வைத்த ஐகோர்ட்இருக்குற வேலையைப் பாருங்க.. அப்புறம் 'பஞ்சாயத்து' பேசிக்கலாம் - 'குட்டு' வைத்த ஐகோர்ட்

கொரோனா தொற்று அதிகரித்துள்ள இன்றைய நிலைமைக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு. தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிய நேரிடும்" என்று உயர் நீதிமன்றம் வாய்மொழியாக தெரித்த கருத்துகளை செய்தியாக வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்று மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி கூறினார்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது கிரிமினல் குற்றத்திற்காக நடவடிக்கை கோரி போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த சர்ச்சைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு நீதிமன்றம் இருக்கிறது. ஏதேனும் அற்பமான புகார்கள் வந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தது.

இப்போதைக்கு கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Madras High Court opined that the post mortem on such aspects can wait and that the focus, for now, is on the measures that can be put in place for COVID-19 management in the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X