சினிமா பார்த்து தீர்ப்பு.. ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படும் "நீதிபதி".. விளாசிய எம்பி செந்தில் குமார்
சென்னை: நீதிபதி ஒருவர் அரசியல் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், சினிமா படங்களை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்குவதாகவும் திமுக எம்பி செந்தில் குமார் லோக்சபாவில் பேசி இருக்கிறார்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். இந்த உரை மீதான விவாதம் தற்போது அவையில் நடந்து வருகிறது.
குடியரசுத் தலைவர் உரைக்கு பதில் அளித்து நேற்று திமுக எம்பி செந்தில் குமார் லோக்சபாவில் பேசினார்.

செந்தில் குமார்
திமுக எம்பி செந்தில் குமார் தனது உரையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் திருக்குறளை குறிப்பிட்டு பேசினார். கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக என்று குறிப்பிட்டார். நீங்கள் என்ன கற்றீர்களோ அதன்படி நடக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எழுதப்பட்டு இருக்கும் வாசகங்களை, சட்டங்களை பின்பற்றி இந்த அரசு நடக்கிறதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி வருவாய் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் ஜிஎஸ்டி இழப்பீடு மாநில அரசுகளுக்கு வழங்கப்படுவது இல்லை. முக்கியமாக தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படவில்லை. 16724 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு இன்னும் வழங்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் தனது உரையில் வ. உ சிதம்பரம் பற்றி பேசினார். ஆனால் அவரின் சிலை அடங்கிய தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு குடியரசுத் தின அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

அவமதிப்பு
எங்கள் மாநிலத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களை அவர்கள் அவமதித்துவிட்டனர். முதல்வர் ஸ்டாலின்தான் தற்போது இவர்களின் அலங்கார ஊர்தியை தமிழ்நாடு முழுக்க கொண்டு சென்றுள்ளார். இந்திய இறையாண்மையின் 4 தூண்களில் ஒன்று நீதித்துறை. ஆனால் சமீப காலமாக நீதித்துறையில் சில நீதிமன்றங்களில் இருக்கும் சில நீதிபதிகள் அரசியல் சாயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

நீதிபதி மீது விமர்சனம்
கடந்த சில வருடங்களுக்கு முன்புகூட இரண்டு நீதிபதிகள் தங்களுடன் ஜாதி ரீதியான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதை நாம் பார்த்தோம். அவர்கள் நீதிபதிகளாக இருந்த போதிலும் ஜாதி ரீதியான கூட்டத்தில் கலந்து கொண்டனர். சமீபத்தில் கூட ஒரு நீதிபதி குறிப்பிட்ட ஒரு கட்சி பயன்படுத்திக்கொள்கிறது. பெயில் கிடைக்கவும், தங்கள் வழக்கை தள்ளுபடி செய்யவும் அந்த நீதிபதியை குறிப்பிட்ட கட்சி அடிக்கடி அணுகி வருகிறது.

சிபிஐ
மனுதாரர் சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை வைத்தால் அந்த நீதிபதி சிபிஐக்கு மனுவை மாற்றுகிறார். நீதிபதிகள் அரசியல் அமைப்பு சட்டப்படிதான் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் சில நீதிபதிகள் இந்தி படத்தையும், தமிழ் படத்தையும் பார்த்து தீர்ப்பு வழங்கி வருகிறார்கள். இது தவறான முன்னுதாரணத்தை அளிக்கிறது. சட்டம் படிக்கும் மாணவர்கள் லைப்ரரி தான் செல்ல வேண்டுமே தவிர ஓடிடியில் படம் பார்க்கக் வேண்டிய அவசியம் இல்லை. அந்த நீதிபதியின் தீர்ப்பு தவறான முன்னுதாரணமாக உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications