இவன்தான் அந்த சார்! அதிமுக பிரச்சாரத்திற்கு..அதே ஸ்டைலில் திமுக பதிலடி! மாட்டிய அதிமுக வட்ட செயலாளர்
சென்னை: அதிமுக சார்பாக கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வந்த யார் அந்த சார்? பிரச்சாரத்திற்கு திமுக சார்பாக பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இவன்தான் அந்த சார் என்று திமுக புதிய பிரச்சாரம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு அதிமுக வட்ட செயலாளரை கைது செய்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்கை சரியாக விசாரிக்காத அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜியும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். தென்சென்னை வடக்கு மாவட்ட வட்ட செயலாளர் சுதாகரை பொறுப்பில் இருந்து நீக்கி எடப்பாடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில்தான் இவன்தான் அந்த சார் என்று திமுக புதிய பிரச்சாரம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதிமுக தேடிக்கொண்டு இருந்த அந்த சார் யார் என்று திமுக டிரெண்ட் செய்து வருகிறது. அதிமுக சார்பாக கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வந்த யார் அந்த சார்? பிரச்சாரத்திற்கு திமுக சார்பாக பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.
அதிமுக பிரச்சாரமும் திமுக பதிலடியும்:
சென்னை முழுவதும் அதிமுக சார்பில் யார் அந்த Sir? என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது... கடந்த 1 வாரமாக இந்த பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில்.. யார் அந்த சார்? என்று கேட்டு அதிமுக சார்பாக போஸ்டர் அடிக்கப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட அதிமுகவை இந்த பிரச்சாரம் தூக்கத்தில் இருந்து எழுப்பி உள்ளது. உறங்கிக்கிடந்த அதிமுக தொண்டர்கள் திமிறி எழுந்துள்ளன. அதிமுகவை லைம் லைட்டிற்கு கொண்டு வந்த இந்த பிரச்சாரத்திற்கு பின்னணியில் இருப்பது வேறு யாரும் இல்லை.. அது பிரசாந்த் கிஷோர் என்று கூறப்படுகிறது.
அவர் தந்த ஐடியாவின் அடிப்படையிலேயே அதிமுகவின் இந்த போஸ்டர் பிரச்சாரம் திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகிறது. யார் அந்த Sir? என்ற போஸ்டர் கண்டிப்பாக மக்களிடம் சென்று சேரும் என்று அவர்தான் ஐடியா தந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு:
சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரில்.. அந்த ஆள் தனியாக செய்யவில்லை என்று பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதோடு ஆடி காரில் ஒருவர் வந்ததாக கூறி உள்ளார்.
இதெல்லாம் போக.. உன்னுடைய வீடியோவை.. வைத்து இனி உன்னை அழைப்பேன். நீ வர வேண்டும். உன்னை ஒரு சாரிடம் கூட்டி செல்வேன். நீ ஒத்துழைக்க வேண்டும். நீ Sir ஒருவருடனும் இருக்க வேண்டும். தயாராக இரு என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அந்த சார் யார்... அந்த சார் யார்.. அவர் பல்கலையில் வேலை செய்பவரா.. இல்லை வெளியே இருக்கும் ஏதாவது ஒரு சாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். அதிமுக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம். பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான். அவரின் ஐடியா பெயரிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications