இவர் தான் ரியல் வாரிசு.. பாட்டுப்பாடவா.. பாடம் சொல்லவா.. 100 வயது தந்தையை நெகிழ வைத்த 70 வயது மகன்
நூறு வயது தந்தைக்கு எழுபது வயது மகன் பாடல் பாடி உற்சாகப்படுத்தும் காட்சி நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.
சென்னை: நூறு வயது தந்தைக்கு எழுபது வயது மகன் பாடல் பாடி உற்சாகப்படுத்தும் காட்சி நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது. தளர்ந்து படுக்கையில் விழும் காலத்தில் அன்பு செலுத்தும் இதைப்போல் பிள்ளைகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் தான்.
இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களை கவனிப்பது இல்லை. ஒரு வயதுக்கு மேல் வாழ்வதே சுமையாகிவிட்டது. பெற்றோர்களை சுமையாக நினைக்கும் பிள்ளைகளே அதிகமாக உள்ளனர்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு தற்போது சுமூகமாக இல்லை. தங்கள் சுதந்திரம் பறிபோகும் என்று நினைத்து அவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்வது இல்லை. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையே இந்த காலத்தில் அடியோடு சிதைந்துவிட்டது. இப்படியான சூழலில் அபூர்வமாக சிலர் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள். அவர்களின் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒருவருக்காக மற்றொருவர் வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை பெருநகரங்களில் சாத்தியமில்லாத அளவில் இருக்கிறது. ஆனால் கிராமங்களில் இன்னமும் சில இடங்களில் இருக்கிறது என்பது ஆறுதலான விஷயம்

சரி விஷயத்திற்கு வருவோம். சுமார் 100 வயதான தந்தைக்கு 70 வயதை கடந்த மகன் ஒருவர் பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தந்தையிடம் அவரது மகன், நான் என்ன பாட்டு பாடுகிறேன் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை பாருங்கள் என்று கூறுகிறார்.அப்படியே பாட்டுப்பாடவா, பாடம் சொல்லவா, பறந்து செல்லவா என்று விசிலில் பாடுகிறார்.
இந்த வீடியோவை பார்த்து பலரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். தளர்ந்து படுக்கையில் விழும் காலத்தில் அன்பு செலுத்தும் இதைப்போல் பிள்ளைகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் தான் என்று கூறுகிறார்கள். உண்மை தான் வயதான காலத்தில் பெற்றோரை பாரமாக நினைக்காத பிள்ளைகள் கிடைப்பது தான் அவர்களுக்கு மிகப்பெரிய வரம். வாரிசு படத்தில் சொல்லப்படுவது போல் நிம்மதியான சாவு கிடைப்பது தான் வயதான பெற்றோருக்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கும். ஆனால் அவர்கள் ஏன் இன்னமும் நாம் பூமியில் வாழ்கிறோம் என்று நினைக்கும் நிலை வந்தால் , அந்த வாழ்க்கை என்பது நரகத்தைவிட மோசமானது மட்டுமல்ல.. அது அவர்களுக்கு பெரிய சோகமாகும்.
நூறு வயது தந்தைக்கு
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) February 16, 2023
எழுபது வயதுமகன் பாடல் பாடி உற்சாகப்படுத்தும் காட்சி.தளர்ந்து படுக்கையில் விழும் காலத்தில் அன்பு செலுத்தும் இதைப்போல் பிள்ளைகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் ❣️👌 pic.twitter.com/giFxBKNa6x
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications