என்னையும், மகனையும் கைவிட்டுவிட்டார்.. சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி பரபர புகார்.. என்ன நடந்தது?
இது தொடர்பாக பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை: பிரபல சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் மீது அவரின் மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில் சோஹோ நிறுவனத்தை நடத்தி வரும் ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டில் பல்வேறு சிறிய நகரங்களில் அலுவலகங்களை தொடங்க உள்ளார். உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுப்பது, மாணவர்களை படிக்க வைப்பது என்று இவர் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.
அதே சமயம் இவரின் அரசியல் ரீதியான சில கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் சோஹோ நிறுவனத்தை நடத்தி வந்த ஸ்ரீதர் வேம்பு சான் பிரான்சிசுகோவில் வசித்து வந்தார்.

ஸ்ரீதர் வேம்பு
அங்கே அவர் தனது மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசனுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2020ல் ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டிற்கு நகர்ந்தார். அதில் இருந்து இவர் தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். மதளம்பாறை கிராமத்தில் இவர் வசித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் தெரிவித்து உள்ளது. நான் கிராமத்தில் வாசிக்க விரும்புகிறேன். என்னுடைய ஊழியர்கள் கிராமத்தில் இருப்பதையும் விரும்புகிறேன். எனக்கு நிறைய விவசாய திட்டங்கள் இருக்கின்றன. அதை மேற்கொள்வேன் என்று இவர் குறிப்பிட்டு இருந்தார். கிராமங்களை வளர்க்க வேண்டும் என்று நான் தமிழ்நாட்டிற்கு வந்தேன் என்று ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டு இருந்தார்.

சிக்கல்
இந்த நிலையில்தான் ஸ்ரீதர் வேம்புவின் மீது அவரின் மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், என் கணவருடன் நான் 29 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தேன். அவர் இப்போது என்னை கைவிட்டுவிட்டார். என் மகனுக்கு உடல் ரீதியாக சில பாதிப்புகள் உள்ளன. ஆனால் எங்களை ஸ்ரீதர் கவனிக்கவில்லை என்று கூறி உள்ளார். இது தொடர்பாக கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்துள்ளார். அதோடு எங்களுக்கு என்று பொதுவாக இருந்த சில சொத்துக்களை, சில பங்குகளை, அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிவிட்டார். முறையின்றி இதை செய்துள்ளார்.

பணம்
இதற்காக முறையாக தொகையை கொடுக்காமல் அவர் சொத்துக்களை மாற்றி உள்ளார். அதோடு எனக்கு தேவையான தொகையை அவர் கொடுக்கவில்லை. என்னிடம் கேட்காமல், என்னிடம் சொல்லாமல் அவர் முறையின்றி பங்குகளை மாற்றி உள்ளார். கலிஃபோர்னியாவில் உள்ள குடும்ப சொத்து சட்டம், திருமணத்தின் போது கணவன் - மனைவி தங்கள் இணையின் ஒப்புதலைப் பெறாமல் ரகசியமாக சொத்துக்களை மாற்ற முடியாது. 'குடும்ப' சொத்து என்பது கூட்டு சொத்து என்று கூறப்பட்டு உள்ளது.இதை மீறி ஸ்ரீதர் வேம்பு சொத்துக்களை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றி உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

பதில்
இதற்கு ஸ்ரீதர் வேம்பு பதில் ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ளார். அதில், நான் யாருக்கும் எந்தப் பங்குகளையும் மாற்றவில்லை, மேலும் என் நிறுவனங்களில் எனது நிதி ஆர்வம் எப்போதும் குறையவில்லை. கிராமப்புற மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சிக்காக என்னை அர்ப்பணிப்பதற்காக நான் இந்தியாவுக்குச் சென்றேன். மற்றபடி இதில் வேறு எதுவும் காரணம் இல்லை. நான் பிரமிளை தமிழ்நாடு வர சொன்னேன். அவர் வரவில்லை. என் மகனும் இதனால் அங்கேயே இருக்கிறார். நான் அவர்களை கைவிடவில்லை. அவர்களுக்கு பண ரீதியாக உதவிகள்செய்யாமல் இல்லை , என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications