Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. கல்யாணமான முதல் நாளே கணவர் செய்த காரியம்.. நீதிபதி சொன்ன தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடந்துள்ள ஒரு திருமண வழக்கு, இப்போது பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. அத்துடன் சோஷியல்மீடியாவிலும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.. சம்பந்தப்பட்ட பெண்ணின் புகாரை தொடர்ந்து, கணவரும் உண்மையை ஒப்புக்கொண்டதால் நீண்ட விசாரணையின்றி நீதிமன்றமும் தீர்ப்பை வழங்கி உள்ளது.. அப்படி என்னதான் நடந்தது?

புனே நகரைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண்.. தனது திருமண வாழ்க்கையில் எதிர்பாராத தோல்வியை கண்டவர்.. அதனால் பெரும் ஏமாற்றத்துடன் தன்னுடைய அம்மா வீட்டுக்கே சென்றுவிட்டார்..

Refusal of Physical Intimacy

கணவன் மனைவி

இதற்குபிறகு சட்ட ரீதியான தீர்வை பெற நீதிமன்றக் கதவைத் தட்டினார். புனே குடும்பநல நீதிமன்றத்தை மனுவுடன் அணுகினார்... அந்த மனுவில், "திருமணமான முதல் நாளிலிருந்தே என்னுடைய கணவர், என்னுடன் தாம்பத்திய உறவு கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை... இது எனது மனநிலையை மிகவும் பாதித்துள்ளது. நான் தனிமையில் தள்ளப்பட்டேன்..

திருமணம் என்பது இருவர் இணைந்து வாழ வேண்டிய ஒரு புனிதமான உறவு என்றாலும், கணவரின் இத்தகைய நடத்தை என்னை தனிமைப்படுத்தி விட்டது.. கடுமையான மன அழுத்தத்திற்குள் தள்ளிவிட்டது.. கல்யாணம் நடந்த சில நாட்களிலேயே இந்த பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.. இதை சரிசெய்ய என்னுடைய தனது கணவரிடம் பலமுறை மனம் விட்டு பேசியிருக்கிறேன். ஆனால், கணவரின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை..

தாம்பத்திய உறவு

இதனால் எங்களின் திருமண வாழ்க்கை இயல்பான நிலையை நோக்கி நகரவில்லை... இந்த நிலை நீடித்தால் என்னுடைய எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நீதிமன்றத்தை நாடி வந்துள்ளேன்" என்று மனுவில் கூறியிருந்தார்..

இந்த வழக்கு புனே குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. பொதுவாக இது போன்ற வழக்குகளில் பல மாதங்கள் விசாரணை மற்றும் சாட்சிகள் தேவைப்படும்.

ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கணவர், எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில், "திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் எந்தவிதமான தாம்பத்திய உறவும் கொள்ளவில்லை" என்ற உண்மையை அவர் எவ்வித ஒளிவுமறைவுமின்றி ஒப்புக்கொண்டார்.

செல்லாத திருமணம்

கணவரே குற்றச்சாட்டை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதால், மனைவி கூறிய புகார்கள் உண்மையானவை என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, திருமணம் என்பது வெறும் சமூக ஒப்பந்தம் மட்டுமல்ல, அது உணர்ச்சி, நம்பிக்கை மற்றும் உடல்நிலை சார்ந்த ஒரு ஆழமான பிணைப்பு.. திருமணத்தின் இந்த அடிப்படை அம்சங்கள் ஒரு உறவில் இல்லாதபோது, அந்த திருமணத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.. கணவரின் நேரடியான ஒப்புதல் காரணமாக, வழக்கில் மேலதிக சாட்சிகளோ அல்லது நீண்ட கால விசாரணையோ தேவையில்லை.. எனவே அந்த திருமணத்தை சட்டப்படி செல்லாது என நீதிமன்றம் அறிவிக்கிறது" என்று அதிரடியாக தீர்ப்பளித்தார்..

தாம்பத்திய உறவு

திருமண உறவில் இருவரின் சம்மதமும், புரிதலும், உடல் ரீதியான இணக்கமும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.

திருமணத்திற்கு பிறகு கணவர் ஒருநாளும் தாம்பத்திய உறவு கொள்ளவில்லை என மனைவி புகார் அளித்ததும், கணவரும் இதை எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டதும், இறுதியில் திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்து விசாரணையின்றி தீர்ப்பு வழங்கியதும் பெரும் கவனத்தை பெற்று வருகிறது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+