வாடகைத் தாய் சர்ச்சை: நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விசாரிக்கிறதா சுகாதாரத் துறை?
சென்னை: வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கு கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டிருந்தார். இரட்டை குழந்தைகளின் கால்களை நயனும் விக்கியும் கொஞ்சுவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்
திருமணமான 4 மாதங்களில் எப்படி குழந்தை என ரசிகர்களும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதியில் ஒருவருக்கு இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்ற நிலை இருந்தால் மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பது சட்டம்.

நயன் விக்கிக்கு பொருந்தாது
இதில் முதல் விதியே நயன் விக்கிக்கு பொருந்தவில்லை. திருமணமாகி 4 மாதங்கள்தான் ஆனது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பர் என தெரிவித்திருந்தார்.

பிரபல மருத்துவமனை
இந்த நிலையில் சென்னையின் பிரபல மருத்துவமனை ஒன்றில்தான் நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகிறார்கள். அந்த விசாரணையில், நயன்தாராவுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்திய மருத்துவர்களிடமும் விசாரணை நடைபெறவுள்ளது.

4 மாதங்களாகிறது
நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் வாடகைத் தாய் சட்டம் மீறப்பட்டுள்ளதா, வாடகைத் தாய் முறைபடி நயன்- விக்கி தம்பதிக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதா, இந்த முறையில் ஏதேனும் விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்றெல்லாம் விசாரணை நடத்தப்படுகிறது.

வாடகைத் தாய்
திருமணத்திற்கு முன்பே வாடகைத் தாயின் வயிற்றில் நயன்- விக்கியின் கரு வளர்ந்துள்ளது. இதனால் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்தும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரிக்கிறது சுகாதாரத் துறை. மேலும் வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் எப்போது கரு செலுத்தப்பட்டது, நயன்தாரா - விக்கி தம்பதியில் யாரேனும் ஒருவருக்கு இயற்கை முறையில் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்ற சான்றிதழ் பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

நயன்- விக்கியிடமும் விசாரணை நடத்த முடிவு
சென்னை மருத்துவமனையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியிடமும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில்தான் நயன்தாரா- விக்கி தம்பதியை சுற்றியிருக்கும் சர்ச்சைக்கு ஒரு பதில் கிடைக்கும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications