"சக்கரவர்த்தி கீரை".. தாம்பத்யம் செழிக்க வைக்கும் கீரைகளின் ராஜா "சக்ரவர்த்தி"யை தெரியுமா உங்களுக்கு?
சென்னை: கீரைகள் என்றாலே சத்துக்களும், ஆரோக்கியம் நிறைந்தவை.. ஆனால், ஒருசிலவற்றையே நாம் பயன்படுத்துகிறோமே தவிர, மருத்துவ குணம் நிறைந்த பல கீரைகளை பயன்படுத்தாமலேயே விட்டுவிடுகிறோம். அதில் ஒன்றுதான் இந்த சக்கரவர்த்தி கீரை.
கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால்தான், இதை சக்கரவர்த்தி கீரை என்கிறார்களாம்.. பத்துவாக்கீரை என்றும் சிலர் சொல்வார்கள்.. இந்த இலையின் நடுப்பகுதி ஊதா கலர் அல்லது ரோஸ் கலரில் இருக்கும்..

சத்துக்கள்: இந்த கீரை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம்,நார்ச்சத்து போன்றவை இந்த கீரையில் உண்டு. ஆனால் நார்ச்சத்து சற்று அதிகமாகவே இந்த கீரையில் உண்டு. நூறு கிராம் கீரையில் 3.7 கிராம் புரதம், 0.4 கிராம், கொழுப்பு 2.9 கிராம், மாவுச்சத்து 150 மி. கிராம் சுண்ணாம்புச்சத்து 80 மி.கி., பாஸ்பரஸ் 4.2 மி.கி. உள்ளதாம்..
இந்த கீரையை உணவாக உட்கொள்ளும்போது, குடலை சுத்தம் செய்து, செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கலும் தீர்கிறது.. சிறுநீரக தொற்றையும் அகற்றுகிறது.. புற்றுநோயை செல்களையும் தடுக்கிறது.. இந்த கீரையை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் சேர்த்து தாளித்து தேங்காய்ப்பால் விட்டு சாப்பிட்டால், சிறுநீரக கற்களும் கரைந்துவிடுமாம்.
ரத்தசோகை: அனீமியா பிரச்சனை உள்ளவர்கள், இந்த கீரையை அடிக்கடி எடுத்து கொள்ளலாம். அதாவது, இந்த கீரையை சுத்தம் செய்து நன்றாக அலசி, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, மசித்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, மிளகுதூள், கல் உப்பு சேர்த்து சூப் போல குடித்து வந்தால், ரத்த சோகை நீங்கும்.
அல்லது சக்கரவர்த்தி கீரையுடன் சிறிது சுக்குப்பொடி, வெல்லம் சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தாலும், ரத்தசோகை குணமாகும்.. மாதவிடாய் பிரச்சனை இருந்தாலும் சரி, மூட்டு பிரச்சனை இருந்தாலும் இந்த கீரையை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
பாசிப்பருப்பு: தாம்பத்திய பிரச்சனைக்கு அந்த காலத்தில், இந்த கீரையைதான் அடிக்கடி சமைத்து சாப்பிடுவார்களாம்.. மற்ற கீரைகளை போலவே, இதையும் பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து, கொப்பரை தேங்காய் துருவல் சிறிது சேர்த்து கூட்டு போல சமைத்து சாப்பிடுவார்கள். இதனால், தாம்பத்தியத்தில் நாட்டம் கூடும் என்பார்கள்.
அன்றைய தினங்களில், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு மூட்டு வலி இருந்தால், இந்த கீரையை வைத்தே குணம் அடைந்து விடுவார்களாம். சக்கரவர்த்தி கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, விளக்கெண்ணெய் சேர்த்து வாணலியில் நன்றாக வதக்கி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு மெல்லிய துணியில் போட்டு இறுக கட்டி, மூட்டுவலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் தருவார்களாம். இதனால், மூட்டு வலி குறைவதுடன், எலும்புகளுக்கும் பலம் கிடைக்கும்.
மூட்டுவலிகள்: மூட்டு வலி என்றில்லை.. எங்கே வலி இருந்தாலும், இந்த கீரையுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்து, சூடாக்கி வலி இருக்கும் இடங்களில் தடவினாலே போதும். வலியும் நீங்கும், காயங்களும் ஆறும். அல்லது வெறும் சக்கரவர்த்தி கீரையின் இலையை மட்டுமே அரைத்து பசையாக சருமத்தின் மீது பூசினாலும் காயங்கள் ஆறும்.. தோல் சுருக்கங்களும் நீங்கும்..!!












Click it and Unblock the Notifications