"அவள் + அவன் + அது".. தூக்கத்தை கலைத்த அந்தரங்க ஆதாரம்.. கடைசி நேரத்திலும் ஷாரோனின் உலுக்கிய வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் உயிர் பிரியும்போதுகூட, காதலி மீது அளவுக்கதிகமான நம்பிக்கையை வைத்திருந்தாராம் ஷாரோன்,.. அவளை யாரும் தப்பா பேசாதீங்க என்றும் குடும்பத்தினரிடம் சொல்லி அழுதாராம்..!

கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.. உயிரிழந்த ஷாரோன் ராஜ் வசித்து வரும் பாறசாலை என்ற பகுதி, கன்னியாகுமரி எல்லையில் அமைந்துள்ளது.. மூரியங்கரை சேர்ந்த இந்த இளைஞரின் வயது 23. நெய்யூரில் உள்ள ஒரு தனியார் காலேஜில் பிஎஸ்சி 'ரேடியாலஜி' படித்து வந்தார்.

காலேஜ் செல்லும் வழியில்தான், க்ரீஷ்மா என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.. நட்பு ஏற்பட்டு காதலிலும் விழுந்துள்ளார்.. இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்குமே தெரியும் என்கிறார்கள்..

 விஷம் + கஷாயம்

விஷம் + கஷாயம்

கடந்த 14-ம் தேதியன்று, தன்னுடைய வீட்டில் யாரும் இல்லை என்று சொல்லி ஷாரோன் ராஜை, க்ரீஷ்மா அழைத்துள்ளார்... அப்போது திடீரென ஷாரோன் ராஜுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார்... பிறகு, ஷாரோன் ராஜ் தன்னுடைய நண்பருக்கு போனை போட்டு விஷயத்தை சொல்ல, அவர் விரைந்து வந்து, ஷாரோன் ராஜை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.. மறுநாளே வாயில் புண்கள், வயிற்றுவலி, என்று உடல்நிலை மோசமாகவும், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கும் சிகிச்சை பலனில்லாமல் ஷாரோன் ராஜ் இறந்தேவிட்டார். போலீசார் விசாரணையும் ஆரம்பமானது..

 ஃபர்ஸ்ட் கேள்வி

ஃபர்ஸ்ட் கேள்வி

க்ரீஷ்மாவிடம் முதல் விசாரணை நடத்தப்பட்டது.. ஷாரோன் வீட்டிற்கு வந்ததும் ஒரு ஜூஸ் கொடுத்ததாகவும், அதன் பிறகே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் க்ரீஷ்மா சொன்னார்.. அந்த ஜூஸ் பாட்டிலை பார்த்தபோதுதான் அது காலாவதியாகி விட்டது என்பது தெரியவந்ததாகவும், ஜூஸை குடித்ததால்தான் ஷாரோன் ராஜ் உயிரிழந்ததால், தன்னை கைது செய்யுமாறும் போலீஸாரிடம் க்ரீஷ்மா கதறி கதறி அழுதுள்ளார்.. உடனே போலீஸார், அந்த ஜூஸ் பாட்டில் எங்கே? என்று கேட்டார்கள்.. அதற்கு க்ரீஷ்மா, கோபத்தில் அதை தூக்கி பாதாள சாக்கடையில் எறிந்துவிட்டேன் என்றார்.. இதுதான் போலீஸாருக்கு அவர் மீதான முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 கசப்பு கஷாயம்

கசப்பு கஷாயம்

இந்த பதில்தான் போலீஸாருக்கு க்ரீஷ்மாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தவும் தூண்டுகோலாக அமைந்தது.. அத்துடன் தங்கள் பாணி விசாரணையை போலீசார் நடத்த வேண்டியதாயிற்று.. அப்போதுதான் விஷயத்துக்கு க்ரீஷ்மா வந்தார்.. உயிருக்கு உயிராகவே காதலித்தோம்.. கல்யாணமும் செய்ய முடிவெடுத்தோம்.. ஜோதிடரிடம் என் ஜாதகத்தை காண்பித்தேன். என் ஜாதகப்படி எனது முதல் கணவர் இறந்துவிடுவார் என்றார்.. உடனே எனக்கு பயமாகிவிட்டது.. பரிகாரம் செய்ய முடிவு செய்து, என்னை ஒரு சம்பிராயத்துக்காக திருமணம் செய்யுமாறு ஷாரோன் ராஜிடம் வற்புறுத்தினேன்.

 கசப்பு

கசப்பு

ஒரு கோயிலுக்கு சென்று நாங்கள் மாலை மட்டும் மாற்றி திருமணம் செய்தோம். இது வேற யாருக்கும் தெரியாது. பிறகுதான் அவனை கொல்ல முடிவெடுத்தேன்.. எங்கள் வீட்டில் இருந்த கஷாயத்தை காய்ச்சி அதில் பூச்சி மருந்தை கலந்துதந்தேன்.. இவ்வளவு கசப்பையும் உன்னால் குடிக்க முடியுமா என்பது போல விளையாட்டாக கேட்டு, கஷாயத்தை குடிக்கச் செய்தேன். உடம்பெல்லாம் விஷம் ஏறி இறந்துவிட்டான் என்றார். கேரளாவில் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலையைவிட இந்த சம்பவம் அதற்கு மேல் கிலியை தந்துவிட்டது..

 மாலை மாற்றினோம்

மாலை மாற்றினோம்

இதுஒருபக்கம் இருந்தாலும், உண்மையிலேயே காதலனை கொலை செய்ய ஜாதகம்தான் காரணமா? என்றால், அதுவும் உண்மை இல்லை என்கிறார்கள்.. கேள்வி எழுந்தது.. ஓயாத நிலையில், தற்போது அதே மூட நம்பிக்கையில் மேலும் ஒரு பயங்கர சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருப்பது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கவும், க்ரீஷ்மாவின் புத்தி தடுமாறி உள்ளது.. காதலனை கழட்டிவிட முடிவு செய்துள்ளார்.. ஆனால், இவர்கள் காதலிக்கும்போது, மிகவும் நெருங்கி பழகியுள்ளனர்.. பல இடங்களுக்கு ஜோடியாகவும் சுற்றி திரிந்துள்ளனர்..

 விதவித போஸ்கள்

விதவித போஸ்கள்

அப்போது, தன் காதலியை விதவிதமாக போட்டோ எடுத்து, ஷாரோன் செல்போனில் வைத்திருக்கிறார்... வீட்டில் கல்யாண பேச்சு அடிபட்டதும் போனில் எடுத்த போட்டோக்களை அழிக்குமாறு ஷாரோனிடம் சொன்னாராம் க்ரீஷ்மா. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஷாரோன், போட்டோவை அழிக்க முடியாது என்பதுடன், காதலையும் கைவிட முடியாது என்று திட்டவட்டமாக சொல்லி உள்ளார்.. வருங்கால கணவருக்கு போட்டோக்கள் தெரிந்தால் வாழ்க்கை பாழாகிவிடுமே என்று நினைத்துதான், இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார் க்ரீஷ்மா என்கிறார்கள்.

 பாத்ரூமிலேயே

பாத்ரூமிலேயே

அதேபோல, இந்த கொலை திட்டத்தில் கிரீஷ்மாவுக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றம், மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக போலீசார் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூமிலேயே, க்ரீஷ்மா தற்கொலைக்கு முயன்றதுகூட டிராமா என்பதும் போலீசாருக்கு தெரிந்து விட்டது.. இதையடுத்து போலீசார் அவரை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஷில்பா விசாரணை நடத்தினார்.

தற்கொலை

தற்கொலை

தற்கொலைக்கு முயன்றதாக இன்னொரு கேஸ் க்ரீஷ்மா மீது பதியப்பட்டாலும், இந்த கொலை விவகாரத்தில் கிரீஷ்மாவின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாகவே அதிகம் நம்பினார்கள்.. க்ரீஷ்மா வீட்டுக்கு ஷாரோன் சென்றதை கிரீஷ்மாவின் அம்மா கண்ணால் பார்த்திருக்கிறார்.. ஆனாலும், அவர் உடனடியாக வீட்டுக்கு போகவில்லையாம்.. இதுதான், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.. மேலும், விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை கிரீஷ்மாவின் அம்மாதான் அழித்திருக்கிறார் என்பதும் உறுதியானது.. இதையடுத்து கிரீஷ்மாவின் அம்மா, மற்றும் மாமாவை போலீசார் கைது செய்தனர்.

 பச்சை துரோகம்

பச்சை துரோகம்

இவர்கள் அனைவரையும் சேர்த்து வைத்து விசாரித்தால்தான், முழு உண்மை தெரியவரும் என்றும் நம்பப்படுகிறது.. ஆனால், ஷாரோன் உயிருக்கு உயிராக க்ரீஷ்மாவை நேசித்துள்ளார்.. அளவுக்கு அதிகமாகவே நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார்.. இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொல்லியும்கூட, எப்படியும் காதலி மனம் மாறிவிடுவாள் என்றே நம்பினாராம்.. தன் நம்பிக்கையையும் க்ரீஷ்மாவிடமே பலமுறை சொல்லியும் வந்தாராம்.. அவ்வளவுஏன்? மரண படுக்கையில் கூட, என் க்ரீஷ்மா எனக்கு துரோகம் செய்திருக்க மாட்டாள் என்று முனகி கொண்டே இருந்தாராம்..

 ப்ளீஸ் வேணாம்

ப்ளீஸ் வேணாம்

சிகிச்சையில் இருந்த போது உன்னுடைய காதலி தான் ஜூஸில் என்னமோ கலந்து கொடுத்திருக்க வேண்டும் என்று உறவினர்கள், குடும்பத்தினர் சொன்னார்களாம்.. அதற்கு ஷாரோன், ஆனால் அவள் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை.. அவள் எனக்கு ஜூஸ்தான் தந்தாள், விஷம் கிடையாது, அவளை யாரும் தப்பா பேசாதீங்க என்று ஆஸ்பத்திரியில் எல்லாரிடமும் சொல்லி உள்ளார் ஷாரோன்.. அதே கனத்த நம்பிக்கையில் அந்த உயிரும் போய்விட்டது..!!

மெசேஜ்

மெசேஜ்

தான் திருமணம் செய்து கொண்டால், எங்கே அந்த போட்டோக்களை, வருங்கால கணவனுக்கு, ஷாரோன் அனுப்பி வைத்துவிடுவாரா என்று பயம்தான், கொலை வரை காதலியை கொண்டுசென்றுள்ளதாம்.. இதனிடையே, இன்னொரு தகவலும் போலீஸ் விசாரணையில் வெளியாகி உள்ளது.. ஒரு வருடமாகவே தீவிரமாக காதலித்து வந்ததால், நிச்சயம் காதலி தன்னை ஏற்று கொள்வார் என்றே நம்பி இருந்து வந்துள்ளார். அதனால்தான், சாகும் தருவாயிலும் காதலியை அதிகமாக நேசித்துள்ளார்... விசாரணையின்போது, அவரது இந்த போன் கால்களையும், மெசேஜ்ஜையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.. விஷத்தின் வேதனையால் உடல் இறந்துகொண்டிருக்கும் வேளையிலும் கூட, அந்த பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.. "நீ கவலைப்படாதே.. ஆனால், என்னை மறக்காமல் இரு, அதுவே எனக்கு போதும்" என்று சொல்லி இறுதி விடைபெற்றுள்ளார்..!

பாட்டில்

பாட்டில்

மகள், விஷத்தை கலந்து ஷாரோனை குடிக்க செய்தது, க்ரீஷ்மா அம்மாவுக்கு அப்போதே தெரிந்துவிட்டதாம்.. அதனால், கொலை செய்ய பயன்படுத்திய கஷாய பாட்டில், விஷபூச்சி மருந்து பாட்டில் போன்றவை, போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக, அவற்றை தீவைத்து எரித்ததாக அவரது அம்மா சிந்து மற்றும் மாமா நிர்மல் குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. ஒருவேளை இவர்களுக்கு தெரிந்தே விஷம் வைத்து ஷாரோன் கொல்லப்பட்டாரா? அல்லது கொலை செய்த பிறகு மகள் போலீசிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தடயங்களை அழித்தார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

கஷாயம் ஜூஸ்

கஷாயம் ஜூஸ்

தீவிர சிகிச்சையில் ஷாரோன் மருத்துவமனையில் இருந்தபோது, போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.. அப்போதுகூட, தனக்கு காதலி கஷாயமும், ஜூஸும் கொடுத்து கொலை செய்ய முயன்றதை சொல்லவே இல்லையாம்... தனக்கு உண்மை தெரிந்தும்கூட, கடைசிவரை தன்னுடைய காதலியை போலீசாரிடம் காட்டிக்கொடுக்க மறுத்துள்ளார் ஷாரோன்.. ஆனால் போலீசார், ஷாரோன் நண்பனான ரெஜினிடம் விசாரணை நடத்தியபோதுதான், சந்தேகம் க்ரிஷ்மா மீது திரும்பியிருக்கிறது. அதற்கு பிறகுதான் அவரை விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டுள்ளனர்.

செக்யூரிட்டி

செக்யூரிட்டி

விஷயம் முன்கூட்டியே தெரிந்தும்கூட, க்ரீஷ்மா விஷம் வைத்திருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியபோதுகூட, தன் உயிர்போகும் தருவாயிலும், காதலியை காட்டிக்கொடுக்க மறுத்த ஷரோனின் தூய்மையான காதல், அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது... அந்த ஆத்திரத்தில்தான், கிரிஷ்மாவின் வீட்டில் கல்வீசி தாக்குதலும் நடத்தி உள்ளனர்... க்ரிஷ்மாவின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றாலும், ஷாரோனின் காதல், பலரையும் விக்கித்து போக வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+