அப்பல்லோவில் அயர்ந்து தூங்கிய ராமதாஸ்! மனைவி சரஸ்வதி அம்மாள் செய்த செயல்! உருக்கம்! இதுதான் காதல்!
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதய பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது அவரது கைகளை மனைவி சரஸ்வதி பிடித்து விட்டுக் கொண்டிருந்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை வயதானாலும் காதல் மட்டும் மாறாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அக்டோபர் 5, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னை கிரீம்ஸ் சாலை பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் இதயம் சார்ந்த வழக்கமான பரிசோதனைக்காகவும் (ஆஞ்சியோகிராம் பரிசோதனை உட்பட) அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில், அவர் அக்டோபர் 7, 2025 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். அவர் வெளியே வந்த போது செய்தியாளர்கள், "ஓய்வு எடுக்க மருத்துவர்கள் கூறினார்களா ஐயா" என கேட்டனர். அதற்கு ராமதாஸ், "எனக்கு ஏது ஓய்வு" என கேள்வி எழுப்பிவிட்டு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் ராமதாஸை அவருடைய மனைவி சரஸ்வதி, மகள் காந்திமதி உள்ளிட்டோர் உடனிருந்து கவனித்துக் கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் மருத்துவமனையில் இருந்த போது ராமதாஸ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அருகே அமர்ந்திருந்த மனைவி சரஸ்வதி அம்மாள், தனது கணவரின் கைகளை மெல்ல பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். இது ஒரு விதமான மசாஜ்! கை வலி நீங்கும். உடல் அசதியும் இருக்காது. தூக்கம் நன்றாக இருக்கும். இந்த வீடியோ வெளியான நிலையில் இத்தனை வயதிலும் இவ்வளவு காதலா என பலர் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
ராமதாஸுக்கும் சரஸ்வதிக்கும் திருமணமாகி 60 ஆண்டுகள் ஆகின்றன. அண்மையில் இந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த விழாவிற்கு அன்புமணி வரவில்லை. தாய்க்கு மட்டும் போன் செய்து வாழ்த்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சரஸ்வதி அம்மாளின் பிறந்தநாளுக்கு அன்புமணி, தனது மனைவி சவுமியா, மகள்கள், பேர குழந்தைகளுடன் வந்திருந்து வாழ்த்தினார்.
"தாய் மீது பாட்டிலை வீசினார்" என ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில் அன்புமணி தனது தாயின் பிறந்தநாளுக்கு குடும்பத்தினருடன் வந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது போல் அன்புமணியின் பனையூர் வீட்டிற்கு அண்மையில் சரஸ்வதி அம்மாள் வந்திருந்தார்.
அவரை கைபிடித்து அன்புமணி உள்ளே அழைத்துச் சென்றார். நேற்று முன் தினம் அன்புமணியின் பிறந்தநாளையொட்டி தனது தாயிடம் அவர் ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படமும் வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications