தப்பி தவறி கூட.. இந்த டைம்ல வெளியே போகாதீங்க.. தமிழ்நாட்டிலும் வெப்ப அலை.. முக்கிய அறிவுரை!
சென்னை: தமிழ்நாட்டில் வெப்ப அலை அடித்துக்கொண்டு இருக்கும் நிலையில் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது என்று சுகாதாரத்துறை அரசு அதிகாரிகள் சார்பாக அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, கரூர் ஆகிய வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் திருச்சி, மதுரை ஆகிய மத்திய மாவட்டங்களிலும். வெப்ப அலை வீசும். நாளை வரை இங்கே வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று நிலவரப்படி, தமிழகத்தின் உள்பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. வடக்கு உள் தமிழ்நாட்டின் பகுதிகளில் இயல்பை விட (சுமார் +4.5 டிகிரி செல்சியஸ்) அதிகமாக இருந்தன.
கரூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வெப்பச் சலனம் நிலவுகிறது. அதிகபட்சமாக சேலத்தில் பதிவான வெப்பநிலை: 41.5°C (+3.9°C), அதைத் தொடர்ந்து திருப்பத்தூர்: 41.4°C (+4.2°C), கரூர் பரமத்தி: 41.0°C (+4.5°C), வேலூர்: 40.8°C ( +2.9°C), தருமபுரி: 40.7°C (+4.5°C), ஈரோடு: 40.7°C (+3.3°C) & திருச்சிராப்பள்ளி: 40.5°C (+3.1°C). திருத்தணி, நாமக்கல் பகுதிகளிலும் 40 டிகிரி செல்சியஸ் பதிவானது. மதுரை (நகரம் & விமான நிலையம்), சென்னை (MBK), கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூரில் 39°C முதல் 40°C வரை பதிவானது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் 34°C முதல் 37°C (இயல்புக்கு மேல் 2-3°C) மற்றும் மலைப் பகுதிகளில் 23°C முதல் 28°C வரை பதிவாகியுள்ளது (சில பாக்கெட்டுகளில் சாதாரண அதிகபட்ச வெப்பநிலையை விட குறிப்பிடத்தக்க அளவு குறிப்பிடத்தக்கது. ) சென்னை (MBK) சாதாரண அதிகபட்ச வெப்பநிலையான 39.6°C (+4.3°C)க்கும் அதிகமாகவும், NBK சாதாரண வெப்பநிலை 36.7°C (+2.4°C)க்கும் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
வெப்பம் உயர்ந்தது: தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ள அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பாக சில அறிவுரைகள் வழங்கப்பட்ட உள்ளன. அதில், வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். மதியம் 12 -3 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும்.
உடல் சூட்டை குறைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொண்டு சூட்டை தணிக்கும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
வெளியில் செல்வதாக இருந்தால் முழுதாக உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோலில் எரிச்சல், அதிக சூடு, சூடு கட்டிகள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
ஜூஸ் உள்ளிட்ட உடலில் தண்ணீர் அளவை அதிகரிக்கும் பொருட்களை குடிக்க வேண்டும்.
குழந்தைகள், வயதானோர், பெண்கள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்கள் முடிந்த அளவிற்கு வீட்டிலேயே இருக்க வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் மிக கடுமையான வெயில் இன்றும் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெயில் அடிக்கும். இன்னொரு பக்கம் வடக்கு தமிழகம் போலவே மத்திய தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். திருத்தணியில் வெயில் வாட்டி எடுக்கும். ஈரோடு, வேலுார், ராணிப்பேட்டை மதுரை, திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும். இதில் வேலூரில் மிக அதிகமாக வெயில் இருக்கும். சென்னையில் கொஞ்சம் வெப்பநிலை குறைவாக இருக்கும். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக லேசான அனல் காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications