சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொளுத்துது வெயிலு.. 6, 7 தேதிகளில் 11 மாவட்டங்களில் அனல் அடிக்குமாம்.. மண்டை பத்திரம்!

அடுத்த 2 நாளைக்கு வெயில் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் 2 நாளைக்கு தமிழகத்தில் வெயில் கொளுத்த போகிறதாம்.. குறிப்பாக வரும் 6, 7ம் தேதிகளில் உள்தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் அன்றைய தேதிகளில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே வெயில் இந்த போடு போடுதேன்னு மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். வரப்போகும் 4 மாசத்துக்கு எப்படித்தான் வெயிலின் பிடியில் இருந்து மீண்டு வெளியே வர போகிறோமோ என நினைத்து அடிவயிற்றில் பீதியே பற்றி கொள்கிறது.

Heat waves two more days

கடந்த 10 நாட்களுக்கு முன்பே சில மாவட்டங்களில் வெயில் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் பல ஊர்களில் 100 டிகிரி வெப்பநிலை காணப்படுகிறது. பொதுமக்கள் புழுக்கம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், இப்போது குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

இது சூப்பர் டிவிஸ்ட்.. சரத்குமார் - விஜயகாந்த் - கமல்ஹாசன் - சீமான் கூட்டணியா? மறைமுக பேச்சு! இது சூப்பர் டிவிஸ்ட்.. சரத்குமார் - விஜயகாந்த் - கமல்ஹாசன் - சீமான் கூட்டணியா? மறைமுக பேச்சு!

இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களான அதாவது திருச்சி, ஈரோடு, மதுரை, வேலூர், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு வெயில் அதிகமாக இருப்பதுடன் அனல்காற்றும் வீசும் என்றும், சொல்லப்படுகிறது.

வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இந்த வெப்பநிலை உயர போவதாகவும், காற்றின் திசையில் மாறுபாடு காணப்படுவதால், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
7 Districts in Tamil nadu will experience heat waves for two more days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X