சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு சீட்டுக்கு அதிமுகவில் அடிதடி.. எனக்கு சீட் தாருங்கள்.. வேதனையாக உள்ளது.. தமிழ் மகன் உசேன் கடிதம்

ராஜ்ய சபா சீட்டுக்காக அதிமுகவில் போட்டி ஏற்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு சீட்டுதான்.. யாருக்கென்று தருவது, எடப்பாடி தரப்பு மண்டையை பிய்த்து கொண்டுள்ளதாம்- வீடியோ

    சென்னை: இருக்கும் ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு அதிமுகவில் ஏகப்பட்ட போட்டா போட்டி நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த சீட் ரேஸில் கலந்து கொண்டிருப்பவர் தமிழ் மகன் உசேன்தான்!

    நடந்து முடிந்த தேர்தலின்போது அதிமுகவுடன் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. அப்போது பாமகவுக்கு 7+1 என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல 5 இடங்களில் தோற்றாலும் தங்களுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று பாஜக கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இப்போதுள்ள சூழலில் அதிமுகவில் 3 ராஜ்ய சபா சீட்டுக்களே சாத்தியம் என்ற நிலை உள்ளது. அதன்படி பாமகவு, பாஜகவுக்கு ஒன்று போக மீதமுள்ளது ஒன்றுதான். இந்த ஒன்றுக்கும் கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது.

    சென்னை தாம்பரம் அருகே பள்ளி வளாகத்தில் தீ விபத்து.. மாணவர்கள் அவசரமாக வெளியேற்றம்.. பெற்றோர் பீதி! சென்னை தாம்பரம் அருகே பள்ளி வளாகத்தில் தீ விபத்து.. மாணவர்கள் அவசரமாக வெளியேற்றம்.. பெற்றோர் பீதி!

    அன்வர் ராஜா

    அன்வர் ராஜா

    இதில் தம்பிதுரை, மைத்ரேயன், கோகுல இந்திரா, பொன்னையன், என பலர் வரிசையில் உள்ளனர். ஒருசிலரோ தங்களுக்குதான் அந்த ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று வெளிப்படையாகவே முதல்வருக்கு கடிதம் எழுதி விண்ணப்பித்தனர். அதில் ஒருவர் அன்வர் ராஜா ஆவார்.

    முதல்வருக்கு கடிதம்

    முதல்வருக்கு கடிதம்

    அந்த வரிசையில் தமிழ் மகன் உசேனும் சேர்ந்துள்ளார். இவர் அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆவார். மேலும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும் உள்ளார். இவர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது:

    வேதனையாக உள்ளது

    வேதனையாக உள்ளது

    "கடந்த 65 ஆண்டுகளாக அதிமுகவில் உள்ளேன். எம்ஜிஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே பல்வேறு கட்சி பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். தற்போது எனக்கு 81 வயதாகிறது. இதுவரை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதில்லை. எனக்கு இது வேதனையாக உள்ளது.

    உழைப்பு

    உழைப்பு

    அதிமுகவில் இதுவரை நான் ஆற்றிய பணிகளை எண்ணி பார்த்து, எனது உழைப்பையும், தியாகத்தையும், முதுமையையும் கருதி, இஸ்லாமியனாகிய எனக்கு வருகிற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் எம்பி பதவியை அதிமுக சார்பில் எனக்கு வழங்க வேண்டும்" என்று கேட்டுள்ளார்.

    இஸ்லாமியர்கள்

    இஸ்லாமியர்கள்

    நடந்து முடிந்த தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்பது ஏற்கனவே சர்ச்சையாக பேசப்பட்டது. இந்நிலையில், ராஜ்ய சபா சீட்டாவது தங்களுக்கு வேண்டும் என்று கட்சியின் சீனியர்கள் குறிப்பாக இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படையாகவே குரல் எழுப்பி வருவதை அதிமுக தலைமை பரிசீலிக்குமா என்பது இனிதான் தெரியவரும்.

    English summary
    Tamil Magan Hussain writes a letter to Chief Minister Edapadi Palanisamy for Rajya Sabha Seat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X