அட.. அரசுப் பள்ளியில் ‘சீட்’ வாங்க இவ்வளவு டிமாண்டா? குவியும் பெற்றோர்கள்.. அப்படி என்ன காரணம்?
சென்னை : பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சீட் வாங்குவதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. தனியார் பள்ளிகளில் சீட் வாங்க பெற்றோர்கள் பல லட்சங்களைக் கொட்டி வரும் நிலையில், அரசுப் பள்ளியில் சீட் வாங்க இங்கு போட்டி நடக்கிறது.
தமிழ்நாட்டில் 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பள்ளிகள் வரும் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அசோக் நகர் பள்ளி : இந்நிலையில் சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'சீட்' வாங்க கடுமையான போட்டி நிலவுகிறது. தற்போது அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது. இங்கு மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தங்கள் மகள்களை சேர்க்க 2 நாட்களாக பெற்றோர்களின் கூட்டமானது அலைமோதி வருகிறது. 6ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புகளில் மாணவிகளை சேர்க்க பெற்றோர் விண்ணப்பங்களை பெற தனியாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
செம டிமாண்ட் : இந்த நிலையில், இந்த டோக்கன்களை பெற அன்றாடம் நூற்றுக்கணக்கான பெற்றோர் பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர். அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு இவ்வளவு டிமாண்ட் நிலவுவது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
அரசுப் பள்ளியான இங்கு நவீன தொழில்நுட்ப வசதியுடன் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையான உள்கட்டமைப்பு வசதி மற்றும் தரமான கல்வி வழங்குவதே இந்தப் பள்ளியில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்புவதற்குக் காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தகைசால் பள்ளி : தமிழ்நாட்டில் 28 அரசுப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து தகைசால் பள்ளிகளாக உருவாக்க இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். அதில், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. இந்தப் பள்ளியை தகைசால் பள்ளியாக மேம்படுத்த 6 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரத்து 430 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகைசால் பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கணினிகள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன. அரசின் முன்னோடித் திட்டமான தகைசால் பள்ளிகள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு இணையான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கல்வி கற்கும் சூழல் ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும்.
அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹை-டெக் வசதிகளோடு தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை மிஞ்சும் அளவுக்கு உருவாகி வருவதால் இங்கு மாணவர் சேர்க்கைக்கு கடும் டிமாண்ட் நிலவுவதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications