தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 28-ந் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பருவமழைக்கு முன்னதாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டி வருகிறது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய வடதமிழக மாவட்டங்கள் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

அடுத்த 48 மணிநேரத்துக்கு
அடுத்த 48 மணிநேரத்துக்கு கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூட கனமழை பெய்யும். ஏனைய கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோவை, புதுவை காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யும்.

தென் தமிழகம்
அக்டோபர் 27,28-ந் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர்ல், நெல்லை, தென்காட்சி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் மேகமூட்டம்
சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடியும் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்சவெப்ப நிலை 34 டிகிரி செல்சியசையும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக் கூடும்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications